Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

 

உள்ளபடிச் சொன்னால்

பிள்ளைபெறும் எந்திரம்!

                       

                        ஆணின் ஆயுளுக்கு

                        அகப்பட்ட அடிமை!

 

அவனின் ஆசை

அடங்கும் வடிகால்!

                       

                        மென்மையின் மறுபெயர்

                        மிளிரும் தளிர்க்கொடி!

 

கண்ணதாசர் கண்களுக்கு

கலையத்துக் கள்!

 

                        மதவெறியர் மனத்தில்

                        மலிவுச் சரக்கு!

சங்கராச் சாரிக்கு

சிங்கார விளைநிலம்!

 

                        கணவனை இழந்தால்

                        கணக்கில் தரிசுநிலம்!

 

ஆமாம் பெண்ணே! – இது

அவரவர் ஆசை

 

                        ஆமென்று ஏற்றால்

                        அடிமை ஆவாய்!

 

ஆர்த்து எழுந்தால்

ஆட்சி செய்வாய்!