பதிவுகள்

செப்டம்பர் 16-30
  • இலங்கையில் நெருக்கடி நிலைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக ஆகஸ்ட் 25 அன்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சே அறிவித்துள்ளார்.
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து 8 வாரத்துக்குத் தடைவிதித்து செப்டம்பர் 30 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதனையடுத்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு கொண்டுவந்த தமிழக அரசின் தீர்மானமும் செப்டம்பர் 30 அன்றே நிறைவேறியுள்ளது.
  • தமிழக அரசின் ஆளுநராக ஆந்திர மாநில மேனாள் முதல்வர் ரோசய்யா ஆகஸ்ட் 31 அன்று பதவிப் பொறுப்பேற்றுள்ளார்.
  • சிங்கப்பூரில் முதன்முறையாக வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவிக்கு டோனி டேன் (71) ஆகஸ்ட் 28 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் கிழக்குக் கடலோர மாநிலத்தை அய்ரீன் சூறாவளி ஆகஸ்ட் 28 அன்று தாக்கியது.
  • ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே 12 நாள்களுக்குப் பின் அவரது 3 கோரிக்கைகளின் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 28 அன்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
  • நேபாள நாட்டின் புதிய பிரதமராக கம்யூனிஸ்ட்(மாவோயிஸ்ட்)கட்சியைச் சேர்ந்த பவுராம் பட்டாராயும்(57) துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக பிஜய்குமார் கச்சதரும் ஆகஸ்ட் 29 அன்று பொறுப்பேற்றுள்ளனர்.
  • ய    ஊழல் புகாரில் சிக்கிய நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் செப்டம்பர் 1 அன்று பதவியை விட்டு விலகியுள்ளார்.
  • சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகாமல் இருக்க முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிவிலக்கு வழங்க மறுத்து செப்டம்பர் 5 அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • சுரங்கத் தொழில் முறைகேடு தொடர்பான வழக்கில் கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி செப்டம்பர் 5 அன்று கைது செய்யப்பட்டார்.
  • ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா என்றும் ஒரியா மொழியை ஒடியா என்றும் மாற்றும் தீர்மானத்திற்கு செப்டம்பர் 6 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சியின் மேனாள் பொதுச்செயலாளருமான அமர்சிங், பா.ஜ.க. மேனாள் எம்.பிக்கள் குலஸ்தே, பகோரோ ஆகிய மூவரும் செப்டம்பர் 6 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *