கலைவாணர் என்.எஸ்.கே.

நவம்பர் 16-30

 

கலைவாணர் என்று அன்பும் பாசமும் அறிவும் பொங்க மதிக்கப் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் அறிவுத் தொண்டு கலைத்துறையில் வேறு எவரையும் ஒப்பிட முடியாததாகும். 49 ஆண்டுகளே அவர் வாழ்ந்தார் என்றாலும், தமிழர்களின் நெஞ்சில் நிரந்தரமாய் இடம் பிடித்தவர். மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்த மூடநம்பிக்கைகளை, பிற்போக்கு எண்ணங்களை, பழமைவாத பழக்க வழக்கங்களை தமது பகுத்தறிவு அணுகுமுறையால் மென்மையாகச் சாடி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர். கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில்,

“இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி
அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி;

நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம்
எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப்
படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் படம்
போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டத்
தகாததாகிவிடும்’’

(‘குடிஅரசு’ 01.11.1944) என்று எழுதினார். இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்? அவரது 110ஆம் ஆண்டு பிறந்த நாள் நவம்பர் 29 (1908).

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *