மழை பொழி
மாலையில்
மறைந்த
நம்
நன்னரை
மாத்
தமிழ்
முன்னரை
இறுதிப்
பேழையில்
இருக்கப்
பார்த்தேன்!
‘பெரியார்’
என்றால்
எழுவார்
போலவே
இருந்தார்!
பிழை
யாய்ப்
பேசிடின்
விழிப்பார்
போலவே
தெரிந்தார்!
வாழ்நாள்
வழியெலாம்
வற்றா
ஊற்றவர்!
வளர்தமிழ்
நிகழினில்
எளிமை
நூற்றவர்!
எதிர்க்கும்
கேள்விகள்
தகர்க்கும்
ஆற்றலர்!
இடறிடும்
முதுமையை
என்றுமே
ஏற்றிலர்!
நாத்திகத்
தமிழையே
நாளும்
ஊட்டினார்!
ஆத்திகக்
குசும்பரை
அலறிட
ஓட்டினார்!
எத்தனை
மேடையில்
இவர்
பொழிவாற்றினார்!
அத்தனைப்
பொழிவிலும்
அய்யாவைப்
போற்றினார்!
வெள்ளாற்றங்
கரையினிலே
பிறந்த
பிள்ளை!
வெல்லு
தமிழ்…
தில்லையிலே
குடித்த
கிள்ளை!
இரங்கற்பா
எழுத
வைத்தார்
பொறுக்கவில்லை!
எமக்
குழைத்தார்
வரலாற்றில்
இறப்பதில்லை!
– பாவலர் அறிவுமதி