அமெரிக்காவில் மனிதம் மறந்த துப்பாக்கிக் கலாச்சாரம் தழைத்தோங்கி வருகிறது. வயது வந்தோரில் 30,00,000 (முப்பது இலட்சம்) பேர் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிளை தினமும் கையில் எடுத்துச் செல்கின்றனர். 90,00,000 (தொண்ணூறு லட்சம்) பேர் மாதம் ஒரு முறையாக அப்படி துப்பாக்கிகளை ஏந்திச் செல்கின்றனர். இந்தத் துப்பாக்கிகளை அவர்கள் மறைத்தே எடுத்துச் செல்கின்றனர். துப்பாக்கிகளை பொது இடங்களில் எடுத்துச் செல்வது பொதுமக்களுக்கான பாதுகாப்புக்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிப்பதாய் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.