சிவில் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

நவம்பர் 01-15

சிவில் சர்வீஸ் தேர்வு எனப்படும் குடிமைப் பணித் தேர்வை மூன்று நிலைகளாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ஆம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழுநேர இலவசப் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தங்குமிடம், இணையதள வசதி, நூலக வசதி மற்றும் உணவு ஆகியவை இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவியாக வழங்கப்படும். டிசம்பர் 4ஆம் தேதி பயிற்சி தொடங்கும். நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

(விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.11.2017)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *