Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உள்ளத்து இருள் அகற்றும் “உண்மை” இதழுக்கு உடனே சந்தாதாரர் ஆகுங்கள்!

 

 என் அன்புத் தம்பிகளே. என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே ‘தமிழ்மண்’ இதழுக்கு எப்படி நீங்கள் ஆயுள் சந்தா தாரர்களாக இருக்கின்றீர்களோ அப்படி ‘உண்மை’ இதழுக்கும் சந்தாதாரர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ‘உண்மை’ இதழில் வருகிற செய்திகளை ‘தமிழ்மண்’ணில் அப்படியே பிரசுரிகிக்கலாம். ஆனால், அதைவிட கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நிலையில் இருப்பதனால், அந்தச் செய்திகளை நம்மால் தமிழ் மண்ணில் பதிவு செய்ய முடியவில்லை. எனவே விடுதலைச் சிறுத்தைகளின் இதழாகவே கருதி ‘உண்மை’ இதழுக்கு நீங்கள் அனைவரும் சந்தாதாரர்களாக  பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். சந்தாதாரர்கள் ஆகவிருக்கும் தோழர்கள் உடனே கையை உயர்த்த வேண்டும். அறிவுப் பூர்வமான, ‘உண்மை’ இதழ்  பகுத்தறிவுப் பூர்வமான நம்முடைய சிந்தனைகளை செழுமை படுத்திக் கொள்வதற்கு ஏதுவான ஒரு இதழ். நீங்கள் ‘தமிழ்மண்’ணில் புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலையும், விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கிற களப்பணிகளையும், அறிந்து கொள்ள முடியும்.  இந்தச் சமூகத்தில் நாம் எதுவெல்லாம் உண்மையன்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ, அதுவெல்லாம் பொய்யானது, போலியானது, மூட நம்பிக்கையானது என்பதை தோலுரிக்கக்கூடிய வல்லமைபெற்ற ஓர் இதழாக ‘உண்மை’  இதழ் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்ற வரலாற்றுப் பெருமைக்குரிய இதழ்; நம்முடைய மூட நம்பிக்கைகளை, மூட நம்பிக்கை என்னும் இருளை அகற்றுகிற ஒரு பேரொளி ‘உண்மை’ இதழ். ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தோழர்கள் ‘உண்மை’ இதழை நீங்கள் வாங்கிப் படிக்கத் தொடங்கிய பிறகு தெரியும் அதன் அருமை, அதனுடைய வலிமை.

எனவே தொடக்கத்திலேயே நான் உங்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் ‘உண்மை’ இதழில் சந்தாதாரர்களாக இயக்கத் தோழர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று எனது வேண்டுகோளை முதலில் பதிவு செய்கிறேன்.

– 30.9.2017 அன்று ஆவடி ‘உண்மை’ வாசகர் வட்ட நிகழ்வில் உரையாற்றியபோது.

-எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்