நூல்:
நரகாசுரப் படுகொலை – ஓர் அரிய ஆராய்ச்சி நூல்.
ஆசிரியர்: அருப்புக்கோட்டை எம்.எஸ்.இராமசாமி
வெளியீடு:
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல்,
84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 7.
பக்கங்கள்: 56
நன்கொடை: ரூ.30/-
புராணங்களை ஆராய்ச்சி செய்து, குறிப்பாக பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் வரும் குறிப்புகளைக் கொண்டே நரகாசுரன் யார்? இரண்யாட்சன் யார்? அவன் செய்த செயல்பாடுகள், அவனைக் கொல்ல வேண்டிய நிலை ஆரியர்களுக்கு ஏன் ஏற்பட்டது? போன்றவற்றை விளக்கி எழுதியுள்ளார் நூலாசிரியர்.
ஆரியர்களின் காட்டுமிராண்டிக் காலத்தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட இந்தக் கதை குறித்த அறிவுப்பூர்வமான கேள்விகளை எழுப்பி, புராணப் பண்டிதர்களையும் வைதீகர்களையும் திணறடிக்கிறார் நூலாசிரியர்.
இறுதியாக இந்தத் தீபாவளிக் கதை ஆரிய திராவிடப் போராட்டத்தால் ஏற்பட்ட கற்பனைக் கதையே என்று விளக்குகிறார்.