குறும்படம்

அக்டோபர் 01-15

 

 

 


About perception of happiness and depression  என்ற கருத்தில் ‘குருதர்சன்’ நிறுவனம் தயாரித்து சதீஷ் குருவப்பன் இயக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறும்படம்தான் றிபிஞி. சிக்கனமாகவும், ஆடம்பரமாகவும் குடும்பம் நடத்துகிற இருவருக்கு வெவ்வேறு அலுவலகங்களில் ஒரே சமயத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. சிக்கனமாக இருப்பவர் ஆனந்தப்படுகிறார். ஆடம்பரமாக இருப்பவர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். ஒரே மாதிரியான செய்தி ஒருவரை கடவுள் இருக்கிறது என்றும், மற்றொருவரை கடவுள் இல்லை என்றும் சொல்ல வைக்கிறது.

கடவுள் என்று ஒன்று இல்லை என்பதைத்தான் அதன்மீது நம்பிக்கையுள்ளவர்களேகூட  ‘அன்பு’தான் கடவுள் என்று சொல்வதைப்போல  ‘சிக்கனம்’தான் கடவுள் என்ற கோணத்தில்  சொல்கிறார் இயக்குநர். மொத்தத்தில் அவரவர் சிந்தனைகள்தான் செயல்களைத் தீர்மானிக்கின்றன என்று சொல்கிறது இந்தக் குறும்படம் 2:36 நிமிடம் ஓடக்கூடிய இக்குறும்படத்தைYoutube இல் காணலாம்.

– உடுமலை

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *