வ.உ.சி.
(பிறந்த நாள் : 05.09.1872)
ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணு வாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்தகாலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் முதன்மை வரிசையில், முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்.
– தந்தை பெரியார்
‘குடிஅரசு’, 22.11.1936