நூல் அறிமுகம்

ஆகஸ்ட் 16-30

நூல்: மறுப்புக்கு மறுப்பு

ஆசிரியர்: மறைமலையடிகள்

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல்,
84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 7.  
பக்கங்கள்: 80
நன்கொடை: ரூ.50/-

தமிழ்க்கடல் மறைமலையடிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்ற புத்தகம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தின் ஒரு கட்டுரையான ‘தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ என்னும் கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பார்ப்பனர்கள் கொந்தளித்தார்கள்; பார்ப்பன ஏடுகள் சீறின.

தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்க ஏடுகளும் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரை ஆதரித்து பார்ப்பனர்களுக்குச் சரியான பதிலடியைத் தந்தன.

தந்தை பெரியார் அந்தக் கட்டுரையையும் அதன் மீதான எதிர் விமர்சனங்களுக்கு மறுப்பாக வந்த கட்டுரைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக குடிஅரசு பதிப்பகம் சார்பில் வெளியிட்டார். அதுவே இந்த நூல். காலத்தின் தேவை கருதி பார்ப்பனியத்தை தோலுரிக்கும் இந்த நூலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் தந்தை பெரியார் எழுதிய ‘குடிஅரசு’ தலையங்கம், சுயமரியாதை படைப்பாளர் சாமி கைவல்யம் எழுதிய கட்டுரை மற்றும் பல்வேறு சுயமரியாதை ஏடுகள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

– அனல்அரசன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *