தேவையற்ற முடி வளர்வது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடின்றி நிகழக்கூடியதே. தற்போது இந்த முடியை நீக்குவதற்குப் பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும் அவை நிரந்தரமில்லை என்பதோடு அம்முறைகள் வலியேற்படுத்துவதாகவும், தொந்தரவு கொடுப்பதாகவும் மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வதாகவும் உள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள லேசர் தொழில்நுட்பம் (Laser Technology) சில மணி நேரங்களில் நிரந்தரமாக வலியில்லாமல் முடியை நீக்கிவிடுகிறது. இதை ஒரே நேரத்தில் செய்து கொள்ள முடியாது. பகுதி பகுதியாக தனி நபரின் முடி, தோல் வாகு, ஹார்மோன் சுரப்பு ஆகியவற்றைப் பொருத்து பல முறைகளில் (6-8 முறை) செய்துகொள்ள வேண்டும்.
தற்காலிக முடி நீக்கிகளை 30-35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதோடு ஒப்பிடும்போது இது ஒரே முறையில் செலவு செய்வதுடன் மிகவும் சிக்கனமாகவும் இருக்கிறது.
தேவையற்ற முடியை நீக்குவதில் ‘ஒலிவா’ ((Oliva) உலகில் நவீனமான முறையில் வேகமாகவும், பாதுகாப்பானதாகவும் நீக்குவதில் முன்னணியில் நிற்கிறது. இந்த மருத்துவமனை தோல்வியாதி நீக்கத்திலும் முடிபற்றிய நோய்களின் ஆய்வுகளிலும் முதன்மையானது என்று டைம்ஸ் ஆப் இந்தியா வரிசைப்படுத்தியுள்ளது.