உடுமலை வடிவேல்
மக்களின் ரசனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில தனிப்பட்ட மனிதர்களும், அமைப்புகளும் தாங்களாகவே தங்களின் வணிக நோக்கத்திற்கு சில கூறுகளை உருவாக்கி, வணிகரீதியிலான திரைப்படங்கள்தான் வெற்றிபெரும் என்ற கருத்தை மக்கள் மீது திணித்து, அதையே பொதுக்கருத்தாக ஆக்கி விடுகிறார்கள். அதற்கு மாறாக மக்களுக்கு விழிப்பூட்டும் சில படங்கள் வந்தாலும், அவை பெரிதாக மக்களிடம் போய்ச் சேர்வதில்லை. ஆனாலும், வணிகச் சந்தையினூடேயே ‘விசாரணை’, ‘ஜோக்கர்’ போன்ற திரைப்-படங்கள் மக்கள் வணிக மசாலா படங்களைத்-தான் விரும்புவார்கள் என்ற மாயையைத் தகர்த்து வருகின்றன. அப்படிப்பட்ட படங்களுள் ஒன்றுதான் தற்போது வெளியாகி மக்களின் ஒட்டுமொத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் திரைப்படம் “மாவீரன் கிட்டு’’. இதில் கிட்டுவாக விஷ்ணு, சின்னராசுவாக ஆர்.பார்த்திபன், கோமதியாக சிறீதிவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்-களை ஏற்று நடித்துள்ளனர்.
கதை 1987 ஆம் ஆண்டு நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலையைச் சுற்றியுள்ள கிராமங்கள்தான் கதை நடை-பெறுகின்ற களங்கள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டு, அவர்களுக்கான தலைவராக அரும்பு-கின்ற — அச்சகம் நடத்திவரும் சின்னராசு என்பவரின் ஊக்கத்தாலும், வழிகாட்டுதலாலும் மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்ற இலக்குடன் படித்து வருகிறார். அதற்கேற்ப பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வாகிறார். இதற்கிடையில் சின்னராசுவுடன் கிட்டுவும் இணைந்து அந்தக் கிராமத்தில் நிலவும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை போக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். ஆனாலும் காவல்துறையும், நீதிமன்றங்களும் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கல்லூரியில் கிட்டுவின் வகுப்பில் பயிலும் உயர்ஜாதியைச் சேர்ந்த கோமதி, தன் தோழியுடன் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மாணவியை புறக்கணிப்பதைப் பார்த்து கிட்டு நாகரிகமாக கண்டிக்கிறான். ஆனால், அப்படி ஒதுக்கிய மாணவியை பாம்பு கடித்து விட்டவுடன் மனிதாபிமானத்தோடு சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள மருத்து-மணைக்கு மாணவர்களின் உதவியுடன் தூக்கிச்சென்று காப்பாற்றுகிறான். கோமதி மனம் நெகிழ்ந்து கிட்டுவை ஜாதியைத் துறந்து காதலிக்கிறாள். கிட்டுவும் கோமதியை காதலித்தாலும் அதை வெளிக்காட்டாமல் விலகியே இருக்கிறான்.
ஆனாலும், கோமதியின் தந்தை முற்போக்கு சிந்தனை உள்ளவராக இருப்பதால் கோமதி கிட்டுவின் காதலை ஏற்கிறார். இதையறிந்த உயர்ஜாதிக்காரர்கள் காவல்துறையின் உதவியுடன் கோமதியின் தந்தையை கொலை செய்து அந்தப் பழியைக் கிட்டுவின் மீது சுமத்துகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட கிட்டு போதிய ஆதார-மில்லாத-தால் சின்னராசுவின் உதவியுடன் ஜாமீன் பெறுகிறான். அதன்பின் அவனுக்கும் காவல்துறைக்குமிடையே சவால்கள். காவல்-துறையின் வன்செயலை வெளிப்படுத்த சின்னராசு ஊர்மக்களின் துணையோடு காவல்-நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்குகிறார். போராட்டத்தின் மீது ஊடகங்களின் வெளிச்சம் படுகிறது. காவல்-நிலையத்தில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட கிட்டுவை வெளியில் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு காவல்துறையினர் தள்ளப்-படுகின்றனர். ஆனால், கிட்டுவைக் காண-வில்லை. கிட்டு கிடைத்தாரா? சின்னராசுவின் போராட்டம் என்ன ஆனது என்பதுதான் எஞ்சிய கதையை ஆர்வத்துடன் நகர்த்திச் செல்கிறது.
திரைப்படம் புதூர் கிராமத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோரை நினைவுபடுத்தியபடி தான் தொடங்குகிறது. தாழ்த்தப்பட்ட எழுத்தாளர் காளிமுத்து இறந்துபோனதை அடுத்து அவரது பிணத்தை ஊருக்குள் தூக்கிச்செல்ல சின்னராசு நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதில் தொடங்கி, லு கி.மீ. தூக்கிச் செல்லவேண்டிய தாழ்த்தப்பட்டோர் பிணத்தை ஊரையொட்டி-யுள்ள குளம் நிறைந்துவிட்டால் 6 கிலோ மீட்டர் தூரம் ஊரைச் சுற்றிதான் தூக்கிச் செல்லவேண்டிய நிலை.
“கோர்ட்டு உத்தரவு போட்டுட்டா ஊருக்குள்ள பொணத்த தூக்கிட்டு போயிருவாங்-களா?’’ இன்னிக்கு பொணத்தை தூக்கிட்டு வரேம்பாங்க. நாளைக்கு பொண்ணு கேட்டு வருவானுங்க’’, “சோத்துக்கே வழியில்லாத-வனுங்க சோசலிசம் பேசறானுங்க’’ என்ற ஆதிக்க ஜாதியினரின் கேள்வியும், “ஆடுமா-டெல்லாம் போகுது. நாங்க போகக்-கூடாதா?’’ என்ற எதிர்க்கேள்வியுமாக வசனங்களில் அனல் தெறிக்கிறது. கிட்டு மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டிப் பேசுவது நெஞ்சைத் தொடுகிறது. “உயிரெல்லாம் ஒன்றே!’’ என்ற பாடலில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் குரலையும், “கண்ணடிக்கலே கைபிடிக்கலே’’ என்ற பாடலில் செம்புலப்-பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற தமிழர்களின் காதல் மரபும் நினைவுபடுத்தப் படுகிறது. இயக்குநர் கொள்கைத் தடத்தில் சரியாக நின்று குறிக்கோளை எட்டுவதில் வெற்றியடைகிறார்.
மகள் தாழ்த்தப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதைத் தெரிந்து கொண்டு, வஞ்சகமாகப் பேசி அவளை தனியே வரவழைத்து ஈவு இறக்கம் இல்லாமல் அவள் கழுத்தை அறுத்துப் போட்டுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைகிறார் பெற்ற தந்தை. தந்தையின் ஜாதிவெறியை சரியாக வெளிக்-காட்டுகிறது. பேருந்து இருப்பதால் தானே தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்கிறார்கள் என்று ஜாதிக் கலவரத்தை உண்டாக்கி, அதில் பேருந்தையே கொளுத்தி விடுவதைக்காட்டி, பார்ப்பனியம் விதைத்தது, இன்றும் நமது கல்வி வாய்ப்புகளை தட்டிப்-பறிப்பதை நினைவூட்டி இந்தப் பிரச்சினையின் அடித்தளத்தை வெளிக்காட்டுகிறார் இயக்குநர்.
வீரம் என்பது காலத்துக்கு காலம் மாறிக்-கொண்டு வரும் சூழலில் ஜாதியை ஒழிப்-பதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து வெறும் கிட்டு மாவீரன் கிட்டுவாக பரிணாமம் பெற்றுவிடுகிறார்.
ஜாதியொழிப்புப் பணிதான் இன்றைக்கு முதல் பணி! அதைத்தான் இந்தத் திரைப்படம் செய்கிறது. சமூகத்தின் மீதான தெளிவான பார்வையும், திரைமொழியை திறம்பட கையாளும் நேர்த்தியும் திரைப்பட வரலாற்றில் இயக்குநரின் பங்களிப்பு கல்வெட்டுபோல் நின்று நிலைக்கும். இன்னொன்றையும் மறக்காமல் சொல்ல வேண்டும், அதாவது இந்தப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், உரையாடல் எழுதிய யுகபாரதி மூவருமே ‘பெரியார் விருது’ பெற்றவர்கள்.