பழநிபாரதி
கர்ப்ப வலி… பிரசவ வலி… முகம்பார்க்கும் முன்பே
குழந்தை இறந்துவிடும் இழப்பின் வலி… அதற்காக
சுரந்து சுரந்து பால்கட்டி நிற்கிற மார்பின் வலி…
மறுபடியும் ஓர் ஈன்றெடுப்புக்கு உடலையும் மனத்தையும்
பக்குவப்படுத்தும் தாய்மையின் வலி..
குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்குரிய
இந்த வலிகள் அனைத்தும் விடுதலையைப்
பெற்றெடுக்கும் மண்ணுக்கும் உரியன.
விடுதலை இல்லாத மண்ணில், பிறப்பதையும்
இறப்பதையும்விடக் கொடுமையானது
வாழ்தலின் வலி.
தண்ணீரிலிருந்து தரைக்குத் தள்ளப்பட்ட மீனின்
உயிர்த்துடிப்பு…
தரையிலிருந்து தண்ணீருக்குள் விழுந்துவிட்ட
எறும்பின் பரிதவிப்பு…
தாய்மண்ணைவிட்டு விரட்டப்படுகிற பூர்வகுடிகளின்
மனக்கொதிப்பு…