1938ஆம் ஆண்டுகளில் – சென்னை வில்லிவாக்கத்தில் – தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை – அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்
சமூகநீதிச் சரித்திரத்தில் ஓர் பொன்னான அத்தியாயத்தை இணைத்து, மண்ணுக்குள் புதைக்க நினைத்த மண்டல் பரிந்துரையை மத்திய அரசின் ஆணையாக்கி, கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களின் கதவு-களைத் திறக்கத் செய்த மாமனிதர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.
பதவிக்காக, கொள்கைகளைத் தியாகம் செய்யும் மலிவான மனிதர்கள் நிறைந்த பொது வாழ்வுக் களத்தில், கொண்ட கொள்கைக்காக பதவியை _ அதுவும் பிரதமர் பதவியை தியாகம் செய்து மக்களின் இதயத்தில் குடியேறிய மாமன்னன், வி.பி.சிங் ஒரு தனி மனிதரல்லர்; இயக்கம்!
– ஆசிரியர் கி.வீரமணி
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
நினைவு நாள் – (27.11.2016)