வணக்கம். உண்மை ஜூன் 1-_15, 2011 படித்தேன். அய்.அய்.டி.யில் அல்லல்படும் மாணவர்களின் அவலநிலையைப் படித்த போது கைக்கு எட்டியது ……?
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி ஈழத் தமிழ் உறவுகளின் விடிவிற்காக உரத்துக் குரல் கொடுக்கின்றதே, இரும்பு மனம் படைத்த இந்தியா?
காண்டேகர் சிந்தனைத் துளிகள் அருமை. 1925இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது.
குசராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த நூற்றாண்டில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக்கூடத் துவக்கவில்லையே?
அமெரிக்காவில் ஈழ முழக்கம் இந்திய டில்லிக்காரனுக்குக் கேட்குமா?
சின்னகுத்தூசி அவர்கள் வைத்திருந்த பெரிய குண்டே பெரியார் படம்தான்!!
கலைஞரின் குட்டிக் கதைகள் நூல்படி சொர்க்கத்திற்கு வந்தது எப்படி? என்பது எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? – க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
உண்மை இதழ் மிக அருமையாக இருக்கிறது. பயனுள்ள பல செய்திகளை ஏந்தி வருகிறது. வழக்கமான தடத்தை விட்டுப் புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. தங்களுடைய வினா விடைகள் உயிருள்ளவை. செய்திக்கூடை, புதுமையான தலைப்பு மட்டுமன்று, புதுமையான செய்திகளையும் ஏந்தி வருகிறது.
ஜூன் -1_15, -2011 அன்று வெளிவந்த உண்மை இதழில், தமிழகமும் இந்தியாவும் என்ற புள்ளிவிவரக் கட்டுரை மிக அருமை.
– க.ப.அறவாணன்,மேனாள் துணைவேந்தர்
மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். ஜூன் 16–_30 உண்மையில் உங்களுக்குத் தெரியுமா? பகுதி செய்தித் துணுக்காக இருந்தாலும் துணுக்குறச் செய்கிறது.
பாலிதீன், பிளாஸ்டிக் இரண்டுமே இன்றைய மனிதனின் தினசரி வாழ்வில் இரண்டாகக் கலந்துவிட்டது.
அதனால் ஏற்படும் இடையூறுகளை எடுத்துக்காட்டி துணிப் பைகளை உபயோகிக்கக் கூறிய விதம் அருமை!
காலஞ்சென்ற சின்னகுத்தூசி அவர்களின் அனுபவங்கள் இக்கால இளைஞர்களின் கவனத்திற்குச் சென்றால் நல்லது. திரு. முத்துராமலிங்கத் தேவர் முஸ்லிம் தாயிடம் பால் பருகியது போல் கவிஞர் வாலியும் பருகியுள்ள செய்தியை மறக்காமல் அவர் கூறியுள்ளது பல பிராமணர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.
– பி.ஏ.வதூத், மேட்டுப்பாளையம்