ஆசிரியர் பதில்கள்

மே 16-31

வணங்கி வரவேற்பதைவிட கைகொடுத்து வரவேற்பதே நல்லது

கேள்வி :    கூட்டணி ஆட்சிதான் தமிழ்நாட்டிற்குச் சிறந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் கூறுவது சரியா?
– இலட்சுமிபதி, சென்னை-45

பதில் :    அவரது கருத்து, பல்வேறு நிலைப்பாடுகள் கொண்டது. ஆட்சி நிலையான ஆட்சியாக அமைவது சந்தேகமே! அவர்கள் கூட்டணியில் தேர்தலுக்கு ஒன்று சேர்ந்து, அடிப்படை லட்சியங்களை _ ஆட்சி பீடத்திற்குப் போன பிறகு _ நிறைவேற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியப்படும்?

கேள்வி : திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் இளைஞர்களுக்கு என்ன கிடைக்கும்?
– அ.அறிவுச்செல்வம், ஆத்தூர்

பதில் :    அறிவு கிடைக்கும்; மானம் கிடைக்கும்!

கேள்வி : என்ன காரணத்திற்காக உங்களுக்கு பெரியாரைப் பிடித்தது?

– லோ.தேவி, தர்மபுரி

பதில் :    பதவி நாடாத, சுயமரியாதைக் கருத்தை அவர்போல் எதிர்நீச்சல் அடிப்பவர் எவருமில்லை என்பதை செருப்பு வீசப்பட்ட-போதும் சலனமடையாத நெஞ்சம் _ இவை என் மாணவப் பருவத்திலேயே நெஞ்சில் பதிந்தது!

கேள்வி : பெரியார் இறக்கும்நிலையில் உங்கள் பெயரை இறுதியாக அழைத்தபோது உங்கள் உணர்வு என்ன?
– கிருஷ்ணவேணி, காஞ்சி

பதில் :    அந்த குறிப்பிட்ட நேரத்தில், உடன் இல்லையே என்ற வேதனைதான்!

கேள்வி : பெரியார் தேர்தலில் வாக்களித்துள்ளாரா?
– வா.காவேரி, திருச்சி

பதில் :    திருச்சியில் பலமுறை வாக்களித்-துள்ளார்கள்!

கேள்வி : தமிழ்த் தேசியம் பேசுவோருக்குத் தாங்கள் கூறும் நறுக்கான பதில் என்ன?
– நா.மணிமாறன், கருவாரெட்டியூர்

பதில் :    தமிழ்த்தேசியம் திராவிட இன உணர்வுக்கு எதிரானது என்ற தவறான புரிதலிலிருந்து வெளியே வாருங்கள் என்பதே!

கேள்வி : நாம் ஒருவரை வரவேற்க கையெடுத்து கும்பிடுகிறோம். இது சரியான பழக்கமா?
– பி.வேலு, குடியாத்தம்

பதில் :    வழக்கத்தின் அடிப்படையிலே அது நடைபெறுகிறது; கை கொடுத்து வரவேற்பது மிகவும் நல்லது. விரும்பத்தக்கது!

கேள்வி : மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்ற துக்ளக் சோ இராமசாமியின் தலையங்கக் கருத்து சரியா?
– அ.சிவசுப்பிரமணியம், திருவண்ணாமலை

பதில் :    அவர் கருத்து ‘சரி’ என்று வரவேற்றால், அதுவே நம் நிலை நம் மக்களுக்கு _ ஒடுக்கப்பட்டோருக்கு எதிரானது என்பதற்கான நல்ல அளவுகோல் ஆகிவிடும்.

கேள்வி : அர்ஜூனனாகத் தன்னைக் கூறிக்கொண்ட வைகோ தேர்தல் (போர்க்) களத்தை விட்டே ஓடிவிட்டது அவர் உறுதியில்லா குழப்பவாதி என்பதைத்தானே காட்டுகிறது?
– வீ.செங்குட்டுவன், தஞ்சை

பதில் :    தேரை ஓட்டிய “பார்த்தனுக்குரிய சாரதியில்லாமையே காரணமோ?’’ அர்ச்சுனர் தனியே சிந்தித்து முடிவு எடுக்க முடியாத பரிதாப நிலைதான்!

கேள்வி : நாவல்கள் படிப்பதுண்டா? யாருடைய எழுத்து தங்களைக் கவர்ந்தது?
– கோவி. கோபால், சென்னை

பதில் :    தமிழில் வி.ச.காண்டேகர், அறிஞர் அண்ணா, பேராசிரியர் மு.வ.; ஆங்கிலத்தில் இர்விங் வேலஸ் (Irving Wallace) எழுதிய புதினங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *