பளீர்

ஜூலை 01-15

இன்னொரு புளுகன்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் ரமேஷை அடித்துத் துரத்தியுள்ளனர்.

சில நாள்கள் காட்டுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த ரமேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்குள் வந்து, தானே புட்டபர்த்தி சாய்பாபாவின் அவதாரமாகிய பிரேம்சாய் எனக் கூறி விபூதி வரவழைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்க்க வந்துள்ளனர். ஆன்மீகச் சொற்பொழிவினை நடத்தி, கையில் விபூதி, ஆஞ்சநேயர் டாலர், கற்கண்டு, 1 ரூபாய் நாணயங்களை வரவழைத்ததாக பக்தர்கள் புகழ்ந்து கூறியுள்ளனர். சாய்பாபாவின் அருளால்தான் இப்பொருள்களை வரவழைத்ததாக ரமேஷ் கூறியுள்ளார்.

மாண்டியா மாவட்டத்தில் பிரேம்சாய் என்ற பெயரில் சில வருடங்களுக்குப் பிறகு அவதரிக்கப் போவதாக சாய்பாபா கூறினார். இப்போதே சர்ச்சை பாபாக்கள் அவதரிக்க ஆரம்பித்துவிட்டனர்!

 


ஆனாலும், அப்பவே.. எனக்கொரு டவுட்டு

தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வரலாறு காணாத சட்டசபை தீர்மானத்தை பெருமையோடு நினைச்சிக்கிட்டே அப்படியே கண்ணயர்ந்து, ராஜபக்சேவின் கை, கால்களில் விலங்கிட்டு வீதிகளில் இழுத்துவருவதுபோல கனவு கண்டுகொண்டிருந்தேன்.

தெளிந்து பார்க்கிறேன் ராஜபக்சே அப்படியேதான் இருக்கிறார்; மாறாக, ராஜாஜிதான் அம்மா உருவில் வந்து, ஏன்டா, என்னுடைய குலக்கல்வித் திட்டத்தையா ஒழிச்சிங்க, இருங்கடா உங்க சமச்சீர் கல்வியை ஒழிச்சிக் கட்றேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்.

பழிக்கு பழி. சும்மாவா பின்ன எத்தன வருச பகை இது!

ஆனாலும், அப்பவே எனக்கொரு டவுட்டு. என்னடா இது ஈழ மக்களுக்கு ஆதரவா, இலங்கை அரசுக்கு எதிரா சின்ன துரும்பு அசைஞ்சாக்கூட துக்ளக் சோ, இந்து ராம் இவுங்க எல்லாம் கொதித்து எழுவாங்களே, இப்ப ராஜபக்சேவை கண்டித்து சட்டசபையில் போட்ட தீர்மானத்திற்காக அம்மாவை கடுமையா விமர்சிக்காம கமுக்கமா இருக்காங்களேன்னு..

அதான் சமச்சீர் கல்வியிலே வேலைய காம்சிட்டாங்க. என்னமா யோசிக்கிறாங்க.. நமக்குத்தான் விவரம் பத்தல.

ஏமாந்துட்டேன். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சீடனா இருந்துக்கிட்டு, இப்படி கனவு கண்டது என் தப்புதான்.

எனக்கும் வெறும் தமிழ்த் தேசியவாதிய இருக்கிறவங்குளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போச்சு பாருங்க. ச்சே ரொம்ப வேதனையா இருக்கு.

என்னோட இந்த நிலையை நினைச்சுப் பார்க்கும்போது, பல வருசத்துக்கு முன்னால படிச்ச வைரமுத்து கவிதைதான் ஞாபகத்துக்கு வருது,

பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது,
கட்டியிருந்த
கோவணம் களவாடப்பட்டது,

வே.மதிமாறன் தனது வலைப்பூவில்...


அக்கிரகாரமாகும் அய்.அய்.டி

இந்தியாவில் பெரும்பாலும் பெற்றோர்கள் மூலமாகவே எய்ட்ஸ் நோய் குழந்தைகளுக்குப் பரவுகிறது. பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் ரத்தம் செலுத்தும்போது குறைந்த எண்ணிக்கையிலேயே எய்ட்ஸ் நோய் தொற்றுகிறது. எய்ட்சால் பாதிக்கப்படும் பெண் மூலம் அவரது குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர் மூலம் ஆண்டுதோறும் 21 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுக்கத் தேவையான மருந்துகள், உதவிகளை யுனிசெப் செய்து வருவதாக அதன் தலைவர் இவான் கேமரோனி தெரிவித்துள்ளார்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க ஆய்வறிக்கையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவில் எய்ட்ஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


 

இப்படி ஒரு யோகாவாம்

செக்ஸ் கலந்த யோகா பயிற்சியானது சென்னை – தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரில் செயல்பட்டு வந்த யோகா பயிற்சி மய்யத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினைக் கொடுக்க, 3 பெண்களும் 4 ஆண்களும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். இதில், டென்மார்க்கைச் சேர்ந்த தம்பதியரான மிகாய் ஸ்பென்ஸ், அடினா ஆபாச படங்களில் நடித்தவர்கள் என்று காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்கு வருமாறு வெளிநாட்டின ருக்கு காவல்துறை உத்தரவிட, அவர்கள் யோகா மய்யத்தைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனராம். எனவே, காவல்துறை யோகா மய்யத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏராளமான ஆபாச குறுந்தகடுகள் (சி.டி.) கிடைத்துள்ளன.

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பெயரில் செயல்பட்டுவரும் இந்த யோகா மய்யம் சென்னையில் தோன்றி 2 ஆண்டுகள் ஆகிறது. பயிற்சி அளிப்போர் 7 பேரும் தனித்தனியாக வெப்சைட் வைத்து, விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளனர். ஒரு வருட யோகா பயிற்சிக்குப் பின் நீலாங்கரை மய்யத்தில் செக்ஸ் கலந்த தாந்திர கிளவ் கற்றுக் கொடுக்கப்படுமாம்.
பயிற்சியாளர்கள் 7 பேரும் வெளிநாட் டிற்குத் தப்பிச் செல்லாமலிருக்க அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ள  காவல் துறையினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *