கேள்வி : தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளைத் துணிவுடன் அம்பலப்படுத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் நடுநிலைப் போக்குகளை, தமிழகத்தின் தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைபிடிக்கத் தயங்குவதேன்?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : தமிழ் ஏடு எழுதுவோருக்கு ஏனோ தயக்கம்? 1. முழுப்பக்க விளம்பரங்கள் என்ற ‘அல்வா’ கிடைக்காமற் போகலாம். 2. சிறை, வழக்கு கண்டு அஞ்சி ஒடுங்கும் அச்சம். இவை இரண்டும் காரணமாக இருக்கலாம்!
கேள்வி : ‘மற்ற மதங்களில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்தால் தொகை வழங்கப்படும்’ என ஹிந்துத்துவா அறிவிப்பது எதனைக் காட்டுகிறது?
– வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : ஹிந்துத்துவாவின் “வளத்தை’’க் காட்டுகிறது! _ வளர்ச்சியை அல்ல!
கேள்வி : தலைநகர் டெல்லியையே கோட்டைவிட்ட பாஜ.க. தமிழ்நாட்டில் கோட்டையைப் பிடிக்கப்போவதாகக் கூறுவது பற்றி?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : ‘கூரை ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாத குப்பன் வானத்தைக் கிழித்து வைகுந்தத்தைக் காட்டவா போகிறான்?’ என்ற கிராமியப் பழமொழியை நினைவூட்டுகிறது!
கேள்வி : ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாங்கித் தந்த தந்தை பெரியார் அவர்கள் பற்றி நினைப்பது இல்லையே மக்கள்’ இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?
– ரவிச்சந்திரன், பழனி
பதில் : எப்போதும் சிமெண்ட் சாலையில் பயணிப்பவர்கள், முந்தைய குண்டுகுழிச்சாலை _ அதனைச் செப்பனிட்டு சிமெண்ட் சாலை போட்டவரை நினைப்பதில்லையே அதுபோல! நன்றிகெட்ட சமுதாயம்! வீபீஷணக் கூட்டம்!
கேள்வி : “அம்மா அழைப்பு மையம்’’ தொடங்கியுள்ளது மக்களுக்குப் பயன்படுமா? அல்லது தேர்தல் கால வாணவேடிக்கையா? தங்கள் கருத்து என்ன?
– சீ.லட்சுமிபதி, வேலூர்
பதில் : தேர்தல் கால வாணவேடிக்கைகளில் ஒன்று! என்பதில் என்ன சந்தேகம்! விதி 110க்கு மேலும் ஒரு கூடுதல் ‘0’ _ அவ்வளவே!
கேள்வி : ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்ட, எழுத்தாற்றல் மிக்க தாழ்த்தப்பட்ட மாணவர் தற்கொலைக்கு, மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் நெருக்கடிதானே காரணம்?
– மா.திருமலை, திருவள்ளூர்
பதில் : ஆம், அதிலென்ன சந்தேகம். அதனால்தானே இரு அமைச்சர்கள் மீது தி.மி.ஸி. போடப்பட்டுள்ளது!
கேள்வி : “இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள்’’ என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் பற்றி தங்கள் கருத்து என்ன?
– தே.மணிகண்டன், திண்டுக்கல்
பதில் : ஒரு திருத்தம். அவர் தமிழில் கூறிய வார்த்தை ‘கயமைத்தனம்’ என்பதேயாகும். ஆங்கில சொல் மொழிபெயர்ப்பாளர் அதை ஷிநீஷீuஸீபீக்ஷீமீறீ எனப் போட்டு, அதை அயோக்கியன் என்று போட்டுள்ளனர் என்று அறிகிறோம். நூற்றுக்கு நூற்றுப் பத்து மடங்கு சரியான கூற்று. வரவேற்கத்தக்க கருத்து!
கேள்வி : “சல்லிக்கட்டு நடத்துவதில் காட்டும் அக்கறையில் சிறிதுகூட தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள்’’ என்பதை மீட்டெடுக்கக் காட்டாத தமிழகத் தலைவர்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கு.குமரன், மதுரை
பதில் : வேட்டியைப் பற்றிக் கவலைப்படாது மேல்துண்டுக்கான கவலையாளர்கள்!
கேள்வி : மகாமகம் நெருங்குவதால், அதற்கான எதிர்ப்புப் பிரச்சாரம், துண்டறிக்கைகள் இவற்றோடு இணையவழிப் பிரச்சாரத்தை பல வழிகளில் செய்தால் மிகுந்த பலனளிக்கும் அல்லவா?
– கி.கண்ணம்மா, வியாசர்பாடி
பதில் : நிச்சயம்; ஏற்கனவே பிரச்சாரம் துவங்கிவிட்டது! தங்கள் ஆலோசனைக்கு நன்றி! ஸீ