பிள்ளையார் வாழ்த்தைவிட பெரியார் வாழ்த்தே முகநூலில் முனைப்புடன் நின்றது

அக்டோபர் 01-15

சிங்கை பிரபாகரன்

அய்யாவின் தத்துவங்கள் மரணிக்கவில்லை!
ஜீவனோடு தான்
உலவிக்-கொண்டிருக்கிறது
என்பதை
இன்று முகநூல்
நிருபித்துள்ளது!
ஆம்
பிள்ளையார் வாழ்த்தை
-காட்டிலும்
பெரியார் வாழ்த்தே
எங்கும்
எதிரொலிக்கிறது!

* * *

பாவலர் அறிவுமதி
செருப்பெடுத்து
அடிச்ச போதும்
சிரிச்சவண்டா
பெரியார்!
நாம
செருப்புப் போட்டு
நடக்கும் இந்த
சிறப்புக்கு
உரியார்!  –

* * *

வந்தியத்தேவன்

இந்து மத கழிசடைகள் தான் பெரும்பாலும் பெரியாரை விமர்சிக்கிறார்கள்.. இதுதான் பெரியாரின் மிகப்பெரிய வெற்றி…

* * *

டான் அசோக்

“ஒரே மருந்து, எல்லா வியாதியும் போகணும்,” என்றால் மருத்துவர்களிடம் மருந்து கிடையாது. ஆனால் தமிழர்களிடம் அப்படியோர் மருந்து இருக்கிறது. அந்த மருந்து பெரியார்.

* * *

செங்கிஸ்கான்

பெரியாரும்!, பிள்ளையாரும்!
-பிள்ளையார் சிலையை
–ராமசாமி பெரியார்
உடைத்தால் நாத்திகம்!
பிள்ளையார் சிலையை
ராமகோபாலன் அய்யர்
உடைத்தால் ஆத்திகம்!—-

* * *

ஜோதிமணி சென்னிமலை

-என்னைப் போன்ற பெண்களும், தமிழ் சமூகமும் பெரியாருக்குப் பட்டிருக்கின்ற நன்றிக்கடன் காலத்தால் தீர்க்க முடியாதது. அந்தச் சுயமரியாதைச் சூரியன்  மூடநம்பிக்கை-களை சுட்டெரித்ததால் அடுத்த நூற்றாண்டுக்கு தமிழகத்தை சென்ற நூற்றாண்டிலேயே அழைத்துச் சென்று விட்டது.

இப்பொழுதும் கூட பெண்களும், சமூகமும் சிந்திக்கத் துணியாத கருத்துக்களை இந்தக் கிழவர் நூற்றாண்டுக்கு முன்பு எப்படி சிந்தித்து பிரச்சாரம் செய்தார் என்று, நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவதில்லை. அவர் ஒரு புரட்சியாளர். பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக முழங்கிய சங்கநாதம். பிராமணியத்துக்கு எதிரான அவரது கலகக்குரல், கடுமையான பிரச்சாரம் தமிழ் சமூகத்தின் சுயமரியாதையை மீட்டெடுத்தது.

அவரது ஆழமான பிராமணிய எதிர்ப்பை திராவிட கட்சிகள் தனது அரசியல் சுயலாபங்களுக்காக வெறும் பிராமண வெறுப்பாக குறுக்கிவிட்டன. ஒரு ஜாதி இன்னொரு ஜாதி மீது, ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கம் கூட பிராமணியம் தான்.-

இதை வெற்றிகரமாக திராவிடக் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்கு வளர்த்தெடுத்ததன் மூலம் பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன. இது பெரியாருக்கும், தமிழ் சமூகத்திற்கும் அவர்கள் இழைத்த மாபெரும் துரோகம். அதனால் தான் இன்று பெரியாரின் மண் என்று சொல்கிற தகுதியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அதிகாரத்திற்காக பிரித்தாளும், வெறுப்பு அரசியல் நடத்தும் சக்திகள் இதே மண்ணில் அவரை அவமதிக்க முடிகின்றது. யாரெல்லாம் அவரால் பயனடைந்தார்களோ அவர்கள் மனதில் அவருக்கு எதிரான விஷத்தை விதைக்க முடிகிறது.

இதை அன்றே உணர்ந்துதான் பெரியார் காமராசரின் பக்கம் உறுதியோடு நின்றார். பெரியாரை சில திராவிடக் கட்சிகள் கைவிட்டிருக்கலாம். ஆனால் பெரியாரின் கடைசித் தொண்டர் இருக்கும்வரை இந்த மண்ணில் சுயமரியாதையின் கொடி பறக்கும்.

* * *

ஆம் ஆத்மி கட்சி, தமிழ்நாடு

-சுதந்திர போராட்ட வீரரும், சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடிய தன்னலமற்றவரும், தீண்டாமைக்காக இறுதிவரை போராடியவரும், பெண் அடிமை தனத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் நபர்களில் ஒருவருமான திரு. ஈ.வெ.ரா. பெரியார் அவர்களுக்கு வணக்கங்கள்

* * *

உமா க்ருஷ்

பெரியார் நாம் கும்பிடும் கடவுளை எதிர்த்தவர் என பொங்குகிறார்கள் அந்தக் கடவுளையே காண கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில் இருந்து இருக்கணும்.
* * *
அறந்தை மணி
”கடவுளை மற மனிதனை நினை” –_ பெரியார் # முதல் வாக்கியத்தை எதிர்க்கும் உங்களுக்கு இரண்டாவது வாக்கியத்தின் பொருள் புரியாதா?
* * *
த.கணேசன்
ஜாதியம் ஒழிய எதுவும் செய்ய துணிந்தவர் பெரியார்… சாதியவாதிகள் எதிர்ப்பதில்/புழுங்குவதில் ஆச்சர்யமேதுமில்லை.
* * *
பொறியாளர் ஆன்டனி வளன்
கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு மக்கள், பெண்கள் என்று பல தரப்பட்டவர்களும், மனசாட்சியுடன் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய, கேள்விகள் இன்னும் ஏராளம் உண்டு. பெரியார் என்ன செய்து கிழித்தார் என்பதற்கு அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும்!
அறிவாசான் பெரியாருக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துகள்!
* * *
முகம்மது ஜெஃபிரி
தமிழக வரலாற்றில் ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆளுமை…

சாவுர வயசுல கூட மனுசன் மூத்தர பைய தூக்கிட்டு ஊரு ஊரா சுத்தி மூட நம்பிக்கைக்கு எதிரா பண்ணுன பிரச்சாரம் தான் இன்னிக்கு வரை தமிழ் நாட்டுல பாசிசம் கால் பதிக்க தடையா இருக்கு…..

பெரியார பத்தி தெரிஞ்சிகலாம். வேணாம் ஜஸ்ட், பெரியார்னு சொல்லிபாருங்க. இந்த சங்கபரிவாரங்களுக்கு பொத்துகிட்டு வந்துரும்…

தமிழ்நாடு_தனிநாடு கோரிக்கைய அன்னைக்கே வச்ச ஈரோட்டு கிழவன் இன்னிக்கு இருந்திருந்தா பிரிச்சு வாங்கிட்டு அதுக்கான அடுத்த 50 வருச திட்டத்தையும் சேர்த்தே தந்திருப்பாரு…

ஆளுமைகளின்_ஆளுமை_பெரியார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *