கேரளத்தில் தன்மான விதை ஊன்றி உரிமைக்குரல் எழுப்பி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி விழிப்பூட்டியவர் நாராயண குரு என்று பலரும் அறிவர்.
ஆனால், நாராயண குரு விழிப்பு பெற, சிந்தனை பெற, கருத்துப்பெற காரணமாய் அமைந்தவர் குஞ்சன் பிள்ளை என்றழைக்கப் படும் சட்டம்பி சாமிகள் ஆவர்.
மக்கள் மத்தியில் இருந்த ஜாதிக் கொடுமைகளைக் கொண்டு வந்த ஆரிய பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். ஆரியர்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தையே பாழடித்து விட்டார்கள்; பொருளா-தாரத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். இவரது கருத்துக்களை விளக்கி, வேதாதிகார நிரூபணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
இவரை ஏற்று இவர் கருத்துக்களைப் பின்பற்றி கேரளாவில் புரட்சி ஏற்படுத்தியவர் தான் நாராயணகுரு.