மக்கள் மனசு

ஆகஸ்ட் 01-15

மக்கள் மனசு

ஜாதி மறுப்பு மணம் சரியா?

உண்மை வாசகர்களிடம் முகநூல் வாயிலாகக் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன்.

ராமநாதன்: சாதி மறுப்பு மணங்களுக்கு அரசு அதிகமான சலுகைகள் கொடுத்து ஊக்கம் கொடுத்தால் சாதி ஒழிய வாய்ப்புள்ளது.

மணிவாஸ் டிவிகே: சாதி மனிதனை சாக்கடையாக்கும்.சாதி மறுப்பு திருமணங்கள் தகர்க்கப்படுவது தவறானது.

கார்த்திகேயன் பழனிவேலு: சாதி மறுப்பு மணங்களை எதிர்ப்பது சரியல்ல.

பாபு பாபு: ஜாதி இல்லையென்றால் நம் தேசம் இயங்காது. ஏனென்றால், அரசியலுக்கு துருப்புச் சீட்டே ஜாதிதானுங்கோ.

ஜான் பிரிட்டோ ஜான்: சாதி, கைதேர்ந்த கடைந்தெடுத்த கயவர்களால்  பின்னப்பட்ட சதி. அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எங்கள் ஊர் எல்லைக்கு  வந்தவுடன் எந்த வண்டியில் வந்தாலும் அதிலிருந்து இறங்கி செருப்பு போட்டிருந்தால் அதையும்  கழற்றி கையில் பிடித்துக்கொண்டு வந்ததையும், ஊர் பெரியவர்கள் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவர். இன்று 99 சதவிகிதம் மாறியுள்ளது (எங்கள் பகுதியில்) என்று நிச்சயமாக சொல்லலாம். மேற்சொன்னவை பெருமளவு மாறிவிட்ட போதிலும், இரு ஜாதியினரும் அந்த கொண்டாங்கொடுத்தான் ஆக இன்னும் பல தடைகள் உள்ளன. அவை நீக்கப்பட வேண்டும்.

இந்த ஜாதீய முறைமைகள் ஒழிக்கப்படவும் அனைவர் மனதிலிருந்தும் அழிக்கப்படவும் வேண்டும். அதற்கு விழிப்பூட்டும் பரப்புரைகள் அவசியம்.

பாபு தாஸ்: பொருளாதாராம் சமன்படுத்தபட்டால் ஜாதி ஒழிந்து  விடும்.

பெரியார் போஸ் போஸ்: நாமும் பாரதியின் பாப்பா காலமுதல், சாதிகள் இல்லையடி பாப்பா பாடிக்கொண்டுதான் இருக்கிறோம். விடிந்தபாடா இல்லை. இனி கடுமையான சட்டங்கள் மூலமாகத்தான் தீர்வுக்கு கொண்டுவர முடியும்.

பிருந்தா சாமுவேல் பிந்து: சாதி மறுப்பு திருமணங்கள் செய்வது ஒன்றும் குற்றம் இல்லை, சாதி மறுப்பு திருமணங்களே நல்லதாபடும். அரசு இதை ஊக்கப்படுத்த வேண்டும். சாதி மறுப்பு மணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் அரசு ஏதாவது உதவி செய்யணும்.

காளிதாஸ்: சாதியை பேசிப் பேசி தீர்த்து விட முடியாது, அது மறக்கடிக்கப்பட வேண்டிய ஒன்று. சாதி என்ற சொல்லுக்கு நமது பிள்ளைகளுக்கு என்று பொருள் தெரியாமல் போகிறதோ அன்றுதான் புது விடியல் தமிழகத்திற்கு…..

ராஜ்குமார்: காதலை விதைப்போம். சாதிய மறுப்போம்.. துளிர் விடும் சாதிய சிந்தனைகளை வேர் அறுப்போம்.. கலப்பு திருமணங்களில் புதுவரலாறு படைப்போம்.. மேலும்  விடுதலை, உண்மை நாளிதழ்களிலும், பெரியார் சிந்தனைவாதிகளும் கலப்பு திருமணம் புரிந்து வாழ்வில் வெற்றி கொண்ட தம்பதியரைப் பற்றியும், அரசின் சலுகைகள் பற்றியும் பதிவிட்டு வரும் சந்ததியினருக்கு வழிகாட்ட வேண்டும்.

தமிழ்செல்வன் தமிழ்: ஜாதி இல்லையென்றால் நம் தேசம் இயங்காது. ஏனெனில் அரசியலுக்கு துருப்பு சீட்டே சாதி தானே!

ரீத் விஸ்வா: நண்பர்களே,  நம் தேசம் விட்டு அயல் தேசத்தினை உற்று நோக்கு அப்பொழுது புரியும். நாம் ஜாதி என்ற ஒரு ஈன பழக்கவழக்கத்தை வைத்து நம் தேசத்தை நாமே சின்னாபின்னமாக ஆக்குகிறோம் என்பது புரியும்.

தமிழ்செல்வி நாகப்பன்: கொடுமை. பாலையும்; தேனையும்; உணவுப் பொருளையும்; குடம் குடமாய்க் கல்லின் மேல் கொட்டியும்; யாக குண்டம் என்ற பெயரில் தீயில் எரித்தும் உள்ள நாட்டில் பெரியாரியலைக் கொண்டு செல்ல வேலை நிறைய இருக்கிறது.

க.பழனிச்சாமி: ஜாதி மறுப்பு மணங்கள் தகர்க்கப்படுவது சரியே அல்ல. ஜாதி மறுப்பு மணங்களால்தான் ஜாதியை ஒழித்திட முடியும். ஆதியிலே ஜாதியே இல்லை. பாதியிலே ஜாதி உண்டாக்கப்பட்டது. பார்ப்பானாலே ஜாதி வந்தது. பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர நால்வருணத்தை ஒழித்திடனும். சட்டப்படி இருக்கிற சூத்திரத்தன்மை இல்லாமல் செய்ய வேண்டும். தேவடியாள் மகன் என்பதைத் தகர்த்திட ஜாதி மறுப்பு மணங்கள் தேவையே!

 

அடுத்த இதழுக்கான கேள்வி :

இலவசம் வேண்டாம்! மதுக்கடைகளை மூடு! கோரிக்கை சரியா?

உங்கள் கருத்துகளை உண்மை இதழின் முகநூல் பக்கத்திலோ (www.facebook.com/UnmaiMagazine),
மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமோ பதிவு செய்யுங்கள். சிறந்த கருத்துகள் பதிப்பிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *