மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஜூன் 01-15

ஆண்களின் மூச்சுக்காற்றைவிட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி, அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இதனால், மூக்குக் குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.  மூக்குக் குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.  மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்தத் தங்கம் உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.  சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.

ஏனெனில், பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.  இந்த வாயுக்களை வெளிக்கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

அந்தக் காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…. இந்தக் காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழக்கம் வந்துவிட்டது. ஆனால், கவரிங் அணிவதால் எந்தப்  பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்குச் சரிவராது.

அணு
சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *