ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் நகரில் 2014 டிசம்பர் 8 ஆம் தேதி பள்ளிமாணவர் ஒருவர் சாதாரண காய்ச்சல் என்று கூறி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை யில் சேர்ந்த 2 நாளில் மரணமடைந்து விட்டார். இந்த மரணம் மூளைக் காய்ச் சலால் ஏற்பட்டது என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இளைஞர் மரண மடைந்த அதே தினத்தில் 12 பேர் காய்ச் சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப் படுவது குறித்து ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்தது என்று ஒப்புக்கொண்டுவிட்டனர்.
ஆனால் அதற்கு (டிசம்பர் 20 வரை) ராஜஸ் தானில் மாத்திரம் 47 பேர் மரண மடைந்துவிட்டனர். ஜனவரி மாதத் தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் ராஜஸ் தானில் இருந்து குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா என வேகமாக பரவியது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோகோலாட் கூட இந்த காய்ச்சலில் இருந்து தப்பவில்லை.
இந்த நிலையில் தலைநகர் டில்லி, தமிழ்நாடு, உத்தி ரப்பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஒரிசா என வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி யது. ராஜஸ்தான் மாநிலத்தில் மாத்திரம் 120 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலா னோர் இளைஞர்களும் மாணவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிகவும் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சா லால் இதுவரை 30 பேர் மரணமடைந் திருக்கின்றனர்.
போபாலில் உள்ள ஒரு பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாண வர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டது சோதனையில் தெரியவந்தது இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு தற் போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போபால், இந்தூர், குவாலியர் போன்ற நகரங்களில் பன்றிக்காய்ச்சல் மிகவும் வேகமாக பரவிவருகிறது.
போபால், இந்தூர் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தொடக்கப்பட் டுள்ளது, இருப்பினும் நோய் வேகமாக பரவி வருகிறது. சனிக்கிழமை அன்று போபால் இந்திரா காந்தி மருத்துவ மனையில் பன்றிக்காய்ச்சலால் இருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து போபாலில் பன்றிக்காய்ச்சலால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 12-அய்த் தொட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் பன்றிக்காய்ச்சலால் நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக கூடியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது.
தமிழ்நாடு மாநி லத்தில் இதுவரை 113 நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறி யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால் கடந்த இரண்டு வாரங்களில் 22 பேர் மரணமடைந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மராட்டிய மாநிலத்தில் பரவ ஆரம்பித் துள்ளது. பூனே, அகமத் நகர், நாக்பூர், தானே, மன்மாட் போன்ற மாவட்டங் களில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. மகராஷ்டிராவில் இதுவரை 108 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 73 பேர் மரணமடைந்துள்ளனர். ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட் டோர் மரணமடைந்துள்ளனர்.
பன்றிக்காய்ச்சலால் குஜராத்தில் தொடர் மரணம்
பன்றிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதலிடத் தில் குஜராத் உள்ளது. இந்த மாவட் டத்தில் கடந்த வாரம் மட்டுமே 627 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கபட் டுள்ளது. மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவது குறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய குஜராத் மாவட்டங்கள் முழுவதும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சிறு நகரங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளோம். ஞாயிறு மட்டும் கட்ச் மாவட்ட தலைமை மருத் துவ மனையில் 5 பேர் பன்றிக்காய்ச்ச லால் மரணமடைந்துள்ளனர். அம் ரேலி, சூரத், காந்திநகர், பரோடா நகரங் களில் 77 புதிய நோயாளிகள் கண்டறி யப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முழுவதும் 63 நோயாளிகள் குஜராத்தில் மாத்திரம் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் மிகவேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டில்லி மாநிலத் தேர்தலில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் ஹர்சவர்தனுக்கு மாற்றாக சுகாதாரத் துறைக்கு பொறுப்பேற்ற ஜெகத்பிரகாஷ் நாடா தன்னுடைய அமைச்சரவை பணியை கவனிப்பதை விட்டுவிட்டு பிகார் மாநி லத்தில் ஜிதன் ராம் மாஞ்ஜி மற்றும் நிதீஷ் குமாருக்கு இடையே பிணக்கை உருவாக்கி கட்சியில் பிளவுபடுத்தும் காரியத்தில் நீண்ட நாட்களாக மூழ்கி இருந்தார். தற்போதுஅதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்.
ஆனால் இவரது அமைச்சகப் பணியான தொற்று நோய் தடுப்பு முற்றிலும் செயலிழந்து விட்டதையே நாடு முழுவதும் பரவிவரும் பன்றிக்காய்ச்சால் காண்பிக்கிறது. மருந்து தட்டுப்பாடு தெலங்கானா, ஒரிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்ச லுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப் பாடு நிலவுகிறது. முக்கியமா திருப்பதி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச் சலுக்கு மருந்து இல்லாத காரணத்தால் நோயாளிகள் வெளியேற்றப்படுகின் றனர். நரேந்திரமோடி தலைமையி லான மத்திய அரசு சிறீரங்கம் இடைத்தேர்தலை அனைத்து தமிழக அமைச்சரும் முனைப்பாக ஈடுபட்டு வருவது போல் டில்லி தேர்தலிலும் அத்தனை கேபினெட் அமைச்சர்களும் கடந்த ஒரு மாதமாக டில்லி தெருக் களில் வாக்குகேட்டு அலைந்து கொண்டு இருந்தனர்.
பன்றிக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சலானது ஒரு வகையான இன்புளுயென்சா (வைரஸ் காய்ச்சலாகும்) ஆகும். இது பொதுவாக பன்றிகளைப் பாதிக்கின்றது ஆகவே மனிதர்களையும் பாதிக்கின்றது. வைர சானது மனிதர்களிலிருந்து மனிதர் களுக்கும் காற்று மூலம் மிகவும் விரைவாக பரவும். பன்றிக்காய்ச்சல் ஏற்படும் போது உள்ள அறிகுறிகள்:
உடல் வெப்பநிலை உயர்வடைதல் அத்துடன் மேலும் பின்வருவன வற்றில் ஏதாவது இரு அறிகுறிகள் சாதாரணமாகக் காணப்படும்
இருமல், தலை வலி, தொண்டை , மூக்கிலிருந்து நீர் வடிதல், தசை மற்றும் மூட்டு வலி போன்றவை.
பின்வருவனவும் காணப்படலாம். பொதுவான உடல் நலக் குறைவு உணரப்படும், உடற் சோர்வு, (களைப்பு), பசியின்மை, வயிற்றோட்டம், அரு வருப்பு, வாந்தி, வயிற்றுவலி, நடுக்கா தினுள் கிருமித்தொற்று காரணமாக காதுவலி, மற்றும் அரிதாக வலிப்பு.
பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாட்களுக்கே நீடிக்கின்றன. பொதுவாக அறிகுறிகள் 7-10 நாட்களில் படிப்படி யாக குறைவடைந்து செல்கின்றன. அறிகுறிகள் மறைந்த பின்னரும் உடல் முழுவதும் அரிப்பு மற்றும் கடுமையான வறட்டு இருமல் சில வாரங்களுக்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். வைரஸ் கிருமித்தொற்றுக்கும் நோயின் அறிகுறிகள் காய்ச்சல் வந்த 2-5 நாட்களில் வெளியே தெரியவரும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு 7 நாட் களுக்கு பிறகு வெளியே தெரிய வரும்.
மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான அறிகுறிகள்
இரத்த வாந்தி,
பிரகாச ஒளிக்கு விருப்பமின்மை,
நெஞ்சு வலி,
மூக்கிலிருந்து இரத்தக் கசிவு,
குரல்வளை அழற்சி,
காய்ச்சலுடன் உடல் நடுக்கம்.
குழந்தைகள் மற்றும் இளஞ்சிறு வர்களின் உணவு உட்கொள்ளல் பாதிக்கப்படும்.
– சரா