என்னை அநேகர் மத துவேஷி என்றும், கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லு-வார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லு-வார்கள். அப்படியிருக்க நீங்கள் அழைத்தது மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும்.
எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்-தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின் வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதே மாதிரி கொண்டாட்டத்-தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லிம்களுக்கு அதிருப்தி இருந்திருக்-கலா மானாலும் அநேகருக்குத் திருப்தி ஏற்-பட்டு முஸ்லிம்களால் அல்லாசாமிப் பண்-டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆனால், என்பேரில் கோ-பித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்-கள் மாரியம்மன் பண்டிகையைக் கூட நிறுத்-திவிட சம்மதிக்காமல் மிகுதியும், காட்டு-மிரா-ண்டித் தனமான முறையிலேயே நடத்துகின்-றார்கள். இப்படியேதான் எங்கும் நடை-பெறுகிறது. இந்துக்-களைவிட இஸ்-லாமான-வர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக் கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்கு-கிறது.
ஆனால், இன்னும் அநேக விஷயங்களில் திருத்தப்பாடு ஆக வேண்டி இருக்கிறது என்-பதை மறந்து விடாதீர்கள். முஸ்லிம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக் கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலியவற்றை-யும் நிறுத்திவிடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப் போகாது. இவை இருந்தால்தான் பரிகாசத்திற்கிடமானதா-கும். இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மவுல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மை-யையும், திரு முகமது நபி அவர்களின் உபதே-சத்தின் பெருமையையும் பற்றிச் சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெ-னில், நான் அவற்றைப் படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை, நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப் பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்-கித்தன-மேயாகும். ஏனெனில், பெரிய பெரிய மவுல்விகள் இருக்கும்போது அவர்கள் முன் நான் என்னதான் படித்-தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதைவிட பிரத்-தியட்சத்-தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக் கூடும்.
நான் இந்தச் சந்தர்ப்பத்தை எதற்கு உப-யோ-கித்துக் கொள்ளக் கூடு-மென்-றால் மக்களிடம் பிரத்தி யட்-சத்-தில் காணும் விஷயங்-களைப் பற்றியும் இன்ன-மும் எப்படி நடந்து கொள்ள-வேண்டும் என்கின்ற விஷ-யத்தைப் பற்றியும் பேசு-வதும் பயன்-படுவ-தாகும் என்று கருது-கின்றேன். திரு. நபி அவர்-களின் இவ்வளவு அரு-மையான உபதேசம் என்ப-வற்றில் உலக மக்-கள் எல்லாம் பயன் அடை-யும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்-பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்-படுத்திக் கொள்ளப் பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.
இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்-பதிலும் வேத வாக்கியங்-களிலும் மேன்மை-யானதாய் இருக்-கின்றது என்கின்ற திருப்தி-யானது மனித சமூகத்திற்கு எல்லாப் பயனை-யும் அளித்து விடாது. ஆனால், அதன் தத்துவத்-திற் கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலக மக்களை ஒன்றுபடுத்த-வும் அனைவரையும் சகோதரத் தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்ய வேண்-டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக் கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது. உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியட்ச அனுப வத்தைக் கொண்டு பரீட்சித்து சரி பார்க்க வந்து விட்டது, அதற்குத் துணிந்தும் விட்டது.
செட்டி முடுக்கு செல்-லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். என் சரக்கை பரீட்சிக்கலா-மா? என்கின்ற அடக்குமுறை இனிப் பலிக்-காது. அவர் ஒஸ்தியென்று சொன்னார், இவர் ஒஸ்தியென்று சொன்னார், ஆண்ட-வன் சொன்னான் என்பதெல்லாம் அனுபவத்-திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்-டாவிட்டால் இனி மதிப்புப் பெற முடியாது. ஆதலால், எந்தச் சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப் பார்த்துதான் மதிக்க வேண்டி-யதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லிம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப் பயனைக் கொண்டும்தான் மதிக்கப்பட முடியும்.
இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் பரிகாசம் செய்து விட்டு, முஸ்லிம்-கள் கூண்டு கட்டிச் சுமந்துகொண்டு கொம்பு தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்-கை செய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திரும்பிச் சிரிக்க மாட்டாதா? என்று யோசித்துப் பார்க்க வேண்-டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்-திற்கும் போய் பணம் செலவழித்து விட்டு, பாவம் தொலைந்து விட்டது என்று திரும்பி வரு-வதைப் பார்த்து சிரித்து விட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், முத்துப்பேட்டைக்கும், மக்காவுக்-கும் பணத்தைச் செலவு செய்து கொண்டு போய்விட்டு வந்து தங்கள் பாவம் எல்லாம் தொலைந்து விட்டது என்று கருதிக் கொண்டு புதுக் கணக்குப் போட வந்தார்களானால், மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.
மக்கள் மார்க்கத்தைக் காப்-பாற்றுவதென்றால் கொள்கைகளைப் பகுத்-தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதை-யாய்ப் பார்த்து பயன்படுத்த வேண்டும். தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விரோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அர்த்தம் செய்து-கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்-கையைவிட மோசமான தாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதன் கருத்தையும், உண்-மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.
நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமை-யையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணி-வும் இருந்தால்தான் உண்மையைக் கண்டுபிடிக்-கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்-தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொ-ண்டு இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்த தாகுமா?
நமது சொந்தக் கண்ணைப் பரிசுத்தப் படுத்திப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.
சாளேச்சரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப் பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது.
இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தைச் சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும். மஞ்சள் கண்-ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் மஞ்-சளாகத்தான் தெரியும். சிவப்பு சிவப்பாகவும், பச்சை பச்சையாகவுந் தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்-ணாடி கொண்டு பார்க்க வேண்டும். அது-போலவே தைரியமான பகுத்-தறிவுடன் சுத்த-மான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்க வேண்டும்.
கண்ட உண்-மையை தைரி-யமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்-களுக்குத் தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்-திருந்தால் கடை-சியாக ரிப்பேர் செய்ய முடி-யாத அளவு மோச-மானதாகி விடும்.
நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய்கின்ற அர்த்-தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொருத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்-தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார்கள்? நினைக்-கின்றார்கள் என்று பாருங்கள்.
– (குடிஅரசு 9.8.1931)