1952 இல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத் தொழிலைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்; படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பதும், 1952இல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்து அந்தச் சிறுவர்கள் ஜாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
என்பதும், ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பப் பள்ளிப் பாடநூல்களில் அந்தந்த ஜாதிக்காரர்களின் குலத்தொழிலைப் படத்தோடு போட்டு ஒருமையில் எழுதி அவமதித்தார் என்பதுமாகிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?