இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!
அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!
புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.
மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.
அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.
நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?
இந்தியாவின் வளர்ச்சி எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.
மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது?
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.
ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.
உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும். என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.