ஆவணப்படம்
கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் ஆசியுடன் நடந்த இந்துத்துவ கலவரத்தின் விளைவுகளை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. திவீஸீணீறீ ஷிஷீறீவீஷீஸீ என்ற ஆவணப்படம். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ஓர் அரிய முயற்சி. அதாவது, கலவரக்காரர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், பொதுவான மக்களையும், ஊடகவியலாளர்கள் என்று எல்லா தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராகேஷ் சர்மா.
இந்துத்துவ வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட குஜராத் கலவரம் இந்தத் தலைமுறையை மட்டுமல்ல, அரும்புகளாக இருக்கக்கூடிய அடுத்த தலைமுறையையும் கோரமாக பாதித்திருக்கிறது என்பதை தொடக்கக் காட்சியிலும் இறுதிக் காட்சியிலும் வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல வலி ஏற்படுத்துகிற வகையில் இணைத்துக்காட்டி காட்சி ஊடகத்தின் வலிமையை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்த ஆவணப்படம் மனித நேயத்தை விரும்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய ஆவணமாகும்.
ஆவணப்படம்: Final Solution
இயக்குநர்: ராகேஷ் சர்மா
திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு ஆணித்தரமான மறுப்புகளை அடுக்கியிருக்கும் நூல். நூலில் சில பகுதிகள் ஏற்க இயலாததாக இருந்தாலும்,திராவிட இயக்கத்தின் தொண்டுகள் மூலம் சமூக நீதி எதிர்ப்பாளர்களுக்கு சரியான பதிலடியாக பல செய்திகளை நூலாசிரியர் எடுத்துவைக்கிறார்.
திராவிட இயக்கம் என்ற ஏணியைப் பயன்படுத்தி உயர்ந்துவிட்டு இப்போது எட்டி உதைக்கும் எட்டப்பர்களும், அவர்களைப் பின் பற்றும் அரைகுறைகளும் இந்நூலை நிச்சயம் படித்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பித்தம் தெளியும்.
இணையதளம்
நாவி – தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி
http://tamilpoint.blogspot.in/p/naavi.html
தமிழில் எழுத விரும்பும் பலருக்கும் இருக்கும் பிரச்சினை – சந்திப் பிழை. வெகு எளிதில் நினைவு கொள்ளத்தக்கவை , அல்லது படித்துப் பார்த்தாலே சரிசெய்து கொள்ளத்தக்கவை தான், எனினும் தமிழில் பிழையின்றி எழுதும் கலை இன்னும் பலருக்குக் கைவரவில்லை. பிழைகளைத் திருத்திச் சொல்வதற்கும் ஆட்களைத் தேட முடிவதில்லை என்னும் குறை போக்க மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் நீச்சல்காரன் என்ற கணிப்பொறியாளர். நாவி என்ற பெயரில் அவர் உருவாக்கியிருக்கும் தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி தமிழ்க் கணினி வாலாற்றில் முக்கியமான மைல் கல். இன்று தமிழ் எழுதிகள் நிறைய உருவாகியிருக்கின்றன. ஆனால் பிழைதிருத்தி போன்ற அடுத்த கட்ட நகர்வு மிக முக்கியமானது. அதைச் செய்திருக்கிறது இத்தளம்.
ஒருங்குறித் (unicode) தமிழில் நாம் எழுதிய வரிகளை நாவியில் சென்று இட்டு, ஆய்வு செய் என்ற பொத்தானை அழுத்தினால், வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிப் பரிந்துரைக்கிறது நாவி. பிற மொழிச் சொற்கள், பெயர்ச்சொல் போன்றவை குறித்து அதனால் சரியாகக் கணிக்க முடியாவிட்டாலும் தனது சந்தேகங்களை நாவி வெளிப்படுத்தும். எழுதுபவரின் தேவைக்கேற்ப திருத்திக் கொள்ளலாம்.
அவசியம் அனைவரும் பயன்படுத்தவேண்டிய, அனைவருக்கும் பரிந்துரைக்க வேண்டிய இணையதளம்.