எதுக்குடா நமக்கு?
ஆடிமாசம் தொடங்கிடுச்சி
ஆங்காங்கே சுவரொட்டியும் பொறந்திடுச்சி
இந்தவாரம் உனக்கு
அடுத்த வாரம் எனக்கு
இப்படியே இருக்கு இன்னும்
பலவாரக் கணக்கு
புரியலடா சாமி மாசத்திற்கு
எத்தனை வாரம் _ புரியாம குதிக்குதடா
ஒருசில அவதாரம்
குடிச்சிட்டு கூத்தடிக்க இதுவும் ஒரு சாக்கு
காலங்காலமாய் தொடருது தவறாம இந்தப் போக்கு
ராவானா குடிச்சிட்டு பொண்டாட்டிய மிதிப்பான்
மாலை ஒன்ணுப் போட்டதும் மாறுதலாய் தீயை மிதிப்பான்
வேலைவெட்டி இல்லாம ஊரை சுத்துறவன்
தலையில குடத்தவெச்சுனு சாமினு சுத்துறான்
நாக்குல ஒருஅடி அலகு குத்துறான்
கூடி இருக்கிறவன் எல்லாம் பக்தினு கத்துறான்
வாயில்லா உசுருகல கொன்னுப்புட்டு
வயிறாற சப்புக்கொட்டி தின்னுப்புட்டு
ஆண்டவன் சொன்னதா அமைதியை போதிப்பான்
இருக்கிற கொஞ்சம் அறிவையும் பக்தியில மூழ்கடிப்பான்
ஊரே கூடி கும்மாளம் அடிக்குது
திருவிழா முடிஞ்சதும் ரெண்டுபட்டு கிடக்குது
இதெல்லாம் பொய்யினு தெரியாதவரைக்கும்
ஆன்மீக கூட்டம் உன் கையிருப்ப கரைக்கும்
இல்லாத ஒன்ணும் எதுக்குடா நமக்கு?
சமுதாயமே இதனால பாழ்பட்டு கிடக்கு
பகுத்தறிவு என்னனு புரிஞ்சு ஒத்துக்கோ
மனிதனாய் பூமியில வாழ நீயும் கத்துக்கோ!
– புதுவை ஈழன்