இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.
குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.
8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.
மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :
குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.
கலைஞரின் சுளீர்
செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?
தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.
– தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது… (10.3.2014)