“சபரிமலை” அழைக்கிறது சாவூருக்கு!

ஜனவரி 01-15

– கலி.பூங்குன்றன்

 

பக்தியால் அறிவு நோய்வாய்ப்படுகிறது என்பது ஒருபுறம்; இன்னொரு புறமோ உடல்  நோய்க்கும் ஆளாகிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேடு பற்றி பக்தர் ஒருவர் மனம் நொந்து கொட்டியதை. தி இந்து (தமிழ்) ஏடு வெளியிட்டுள்ளது. (20-.12.2013, பக்கம் 2) அந்தப் பேட்டி இதோ:

சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் இரா.ரமேஷ்சங்கர் கூறும்போது, 15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலையில் சுகாதாரம் என்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. அய்ப்பசி மாத நடைத் திறப்புக்குச் சென்றபோது, பம்பையில் அதிக நீரோட்டம் இருந்தது. ஆனால், ஆற்றின் படித்துறை எங்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் கிடந்தன. பம்பையில் உள்ள கழிவறைகள் முழுக்க சேறும் சகதியுமாக இருந்தன. துர்நாற்றம் வீசியது. சபரிமலையில் உள்ள நடைப்பந்தலிலும், அதைத் தொடர்ந்து சந்நிதானத்துக்குச் செல்லும் பதினெட்டாம் படி அருகிலும் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிந்தன. முந்தைய ஆண்டுகளில் இதுபோல பார்த்ததில்லை. சபரிமலையைப் பராமரித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரள அரசும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். (தி இந்து)

இது ஒன்றும் புதிதல்ல; இதற்கு முன்பும் கூட சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேட்டைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.1.1998) வெளியிட்டு இருந்தது. அதையும் கொஞ்சம் பார்க்கலாம்.

மனிதக் கழிவுகளால் பம்பா நதி பாழ்பட்டது. பட்டனம்திட்டா: ஜன.23,

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பக்தர்கள் வரும் யாத்திரைக் காலம் முடிவடைந்துவிட்ட போதும், பம்பா நதி ஏற்கெனவே ஒரு பெரும் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு மாசடைந்து பாழ்பட்டுவிட்டது.

ஜனவரி 19 அன்று சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது முதல், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன.

பம்பை நதிக்கரையில் தேவஸ்தான போர்டால் தோண்டப்பட்ட கக்கூஸ் குழிகளில் மலம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது; அவற்றை வெளியேற்ற வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை ஒப்பந்தக்காரர்கள் நிறுத்திவிட்டு மலைக்கோவிலை விட்டுச் சென்றுவிட்டனர். தேவஸ்தான் அலுவலர்களும் எந்தவித மனச்சாட்சியும் இல்லாமல் கோவிலை விட்டுச் சென்று விட்டனர்.

67 நாட்களாக மனிதக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த சேரியின வட்டத்தில் உள்ள பெரிய குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. சபரிமலையில் ஏற்கெனவே பாழ்பட்டிருக்கும் சுற்றுச் சூழலுக்கு இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அண்மையில் வழங்கப்பட்ட கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் இந்தக் குழிகள் முறையாக மூடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் தொடங்கும் பம்பா நதியின் கிளை நதியான ஜுநகர் ஒரு மாபெரும் மனிதக் கழிவுத் தொட்டியாகவே மாறிவிட்டது. பண்டிதவளத்தில் இருக்கும் உணவு விடுதிக் கழிவுகளும், கக்கூசுகளில் இருந்து மனிதக் கழிவுகளும் நேரடியாக இந்த ஆற்றில் விடப்படுகிறது.

 

Pampa Sullied by Human Waste

Pathanamthitta, Jan 23: The current pilgrimage season at Sabrimala in Kerala has come to an end but the already depleted Pampa river is being threatened by an alarming degree of pollution.

Since the closure of the Sabarimala temple on January 19, sanitation works in the area have come to a grinding halt.

Excreta from the latrines of the Devaswom Board still remain in the pits dug on the river banks with no alternative arrangement being made for pumping them out.

The contractors have stopped the pumping work and the Devaswom officials too have left the hill shirine without any compunction.

The large pits at Cheriynavattam where the human wastes were dumped for 67 days remain to be covered posing a grave threat to the fragile eco-system of Sabarimala.

The Kerala High Court in a recent order has insisted on covering them properly.

Njunagar, a tributary of river Pampa, originating at Sabarimala has been turned into a veritable cesspool.

Hotel wastes and excreta from latrines in ‘Pandithavalam’ were being directly let into the feeble rivulet.

Polluted waters of Pampa would seriously affect the 17 drinking water supply schemes downstream solely depending on the river.

Further, the backwaters of Kuttanad also would get affected and the pollution control board also has expressed concern over this.

The Kozhencherry based environmental outfit ‘Pampa Parirakshanasamithy’ has demanded that the state government constitute a high power committee to cope with the pollution of Sabarimala during the pilgrimage season.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *