இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்

ஜனவரி 01-15

டெஸ்மாண்ட் டுடு

நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.

டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.

நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.

நன்றி: தி இந்து 8.11.13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *