துளிச் செய்திகள்

டிசம்பர் 16-31- 2013
  • இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.
  • அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
  • வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
  • இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *