- இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.
- அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
- பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
- வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply Cancel reply
Popular Posts
You Might Also Enjoy
<p style="text-align: right;"><strong>- உவமைக் கவிஞர் சுரதா</strong></p> <p><img src="images/magazine/2013/dec/16-31/s19.jpg" border="0" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற நூல் வெளியிடுவதற்கான பணிகளை மனம் உவந்து செய்தவர். பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். காவியம் என்ற பெயரில் கவிதை வார இதழினையும், இலக்கியம், ஊர்வலம், விண்மீன் போன்ற பல இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர். 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியதோடு 4 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
Leave a Reply