– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்
சமீபத்தில் வந்திருக்கக்கூடிய மரபணு சம்பந்தப்பட்ட சிந்து நாகரிகம் பழந்தமிழ் தொன்மங்களின் பருவ மெய்மை. (Is the concreate reality of the Civilization ) Indus Civilization என்பது பழந்தமிழ் தொன்மங்களினுடைய ‘Concreate’ reality.. அதாவது ஒரு வகையான பரும மெய்மை. களவாடல் மாதிரி. இஸ் ஆன் இன்பிராஸ்டச்சர் மாதிரி. இன்னும் சொல்லப் போனால் ஹார்டுவேர் மாதிரி.
பழந்தமிழ் இலக்கியங்கள் சிந்துவெளி மீள்வடிவம், வரிவடிவம், ஆவணப் பதிவு. அதனுடைய மீள் நினைவுகளினுடைய (Recorded History) பர்ஸ்ட் ரிகார்டட் அட்டெம்ட் நமக்குத் தெரியாதா? இடைச் சங்கத்துல என்ன இருந்தது, முதற் சங்கத்திலும் என்ன இருந்தது தெரியாது. நமக்கு கிடைத்தது கடைச்சங்கம். சிந்துவெளி நாகரிகத்தினுடைய பெரிய அடையாளம் எது? நகர நாகரிகம். சங்க இலக்கியங்களைப்போல ஒரு நகர நாகரிகத்தை தூக்கிப்பிடித்து கொண்டாடிய இலக்கியம் வேறெங்கும் இந்திய துணைக்கண்டத்தில் எழுதப்படவில்லை.
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பூம்புகார்பற்றி, மதுரையைப்பற்றி பேசியது எல்லா வகையிலும் நகரங்கள் அமைப்பு முறை. ஆறு கிடந்தன்ன அகநெடும் பெரு ஆறு விரும்பி கிடந்தது மாதிரி வீதிகள், இப்படிப்பட்ட நகர நாகரிகத்தை தூக்கி வைத்துக் கொண்டாடிய இலக்கியம் சங்க இலக்கியம். இரண்டாவது அடையாளம் தொலைதூர வணிகம். தொலைதூர வணிகத்தை தூக்கி கொண்டாடிய இலக்கியமும் இந்திய இலக்கியங்களிலே தலையாய இலக்கியம் சங்க இலக்கியம். மூன்றாவது அந்த சமூக அமைப்பில், சமூக, பொருளாதாரத்தில், வணிகர்கள் கொண்டிருக்கக்கூடிய தலைமைத்தன்மை. அப்படியென்றால்தான் சிந்து சமவெளி நாகரிகத்தினுடைய வணிகர்கள் நெசபட்டோ, மியா, சுமேரியா வரைக்கும் போய் அவ்வளவு பெரிய வணிகம் செய்வதற்கு பின்னணியாக இருக்கக்கூடிய ஒரு ஏற்றம். அந்த ஏற்றத்திற்குச் சான்று சிலப்பதிகாரத்தினுடைய முதல் உலக இலக்கியங்களிலே, உலக காப்பியங்களிலே. முதல் காப்பியத்திலேயே, ஒரு தனிமனித குடும்பத்தை, அரசர் குடும்பத்தை சேராத வணிகர் குடும்பத்தைச் சார்ந்தவர்களை தலைமை காப்பிய மாந்தர்களாக அமைத்து எழுதப்பட்ட ஒரு இலக்கியம்.
ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்ட இலக்கியம். அதிலும் கோவலன் கண்ணகி திருமணத்தை சொல்லும்போது இளங்கோவடிகள் மாநகர்க்கு யானை எறுத்தந்தின்மீது வைத்து மாநகர்க்கு ஈந்தார் மணம் _ யானைகள் மீது ஆட்களை உட்கார வைத்து இவர்களுக்கும், இவர்களுக்கும் கல்யாணம் என்று சொல்லி டவுன் முழுவதுமாக சொல்லிக்கொண்டே போவான். இது சாதாரண ஆட்கள் செய்ய முடியாது. அரசர் காலத்தில் அப்படிப்பட்ட ஒரு வணிக நாகரிகத்தை முன்னிறுத்திய ஒரு இலக்கியம்.
அந்த வகையில் இது மென்பொருள். ஒரு இன்டர் சிவிலிசைசேனோட சாப்ட்வேர். அரசியல் கலப்பற்ற அறிவுசார்ந்த ஆய்வு முயற்சிகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை அரசியல் கலந்துவிடாமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்புணர்வு ஆய்வாளர்களுக்கு தேவைப்படுகிறது.
இதை நான் மிகவும் யோசித்து சொல்லுகிறேன். நாம் இதுவரை வைத்திருக்கக் கூடிய கருதுகோள்களை எல்லாம் மீறியதாகவும் இருக்கக்கூடும். ஒருவகையில் இது தமிழர் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்பதை நிறுவுவதுமாகவும் இருக்கும். அதேநேரத்தில் தமிழர்களின் தொன்மங்கள்பற்றி நாம் கருதி வைத்திருக்கின்ற கருதுகோள்களை மாற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுத்தக்கூடும். உண்மைகளால் மட்டுமே வழிநடத்தப்படுகிற உள்நோக்கம் அற்ற தேடலே பழந்தமிழ் தொன்மங்களின் வேர்களை விசாரிக்கும்.
இதுவரை பேசிக்கொண்டிருந்த இடப்பெயர்களை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் ஒரு ஆய்வை முக்கியமான ஆய்வாக உலக அரங்கில் எடுத்துக் கொண்டு போகமுடியாது. இடப்பெயர்கள் கொற்கை, வஞ்சி, தொண்டி வந்திருக்கலாம். இதை நீங்கள் எப்படி சிந்துவெளி நாகரிகம் என்று சொல்லுவீர்கள். விசாரிப்பதில் முரண்பாடுடன் பேசுவது என்று முடிவு செய்து விட்டால்? எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அப்படிப்பட்ட விஷயங்கள் வரும் என்பதற்காக இடப் பெயர்களை இடப் பெயர்களுக்கு வெளியில் போய் வேறு சில தரவுகளோடு பேசவேண்டும் என்ற முனைப்போடு நான் ஒரு முயற்சி செய்தேன். இந்த நகர அமைப்பு மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரமைப்பு. இது மேற்குப் பகுதியில் இருக்கக்கூடிய மேட்டுப்பகுதி இதன்பெயர் கோட்டைப் பகுதி. ஆங்கிலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் எல்லாம் சிட்டாடல் என்று சொல்வார்கள்.
சிட்டாடல் என்று சொல்லப்படுகிற கோட்டைப் பகுதி. இதை லோயர் டவுன் என்று சொல்வார்கள். கீழ்நகரம் என்று சொல்லப்படுகிற வணிகர்கள் கைவினைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் கீழ்நகர். மேல் நகர் கோட்டைப்பகுதி. இங்கு இருக்கக்கூடிய எலைட் இருக்கக்கூடிய பகுதிகள் இதே மாதிரி ஹரப்பாவில்.
காலிபங்கால், கோட்டைப்பகுதி _ மேல்பகுதி மேற்கில் இருக்கிறது. இதைவிட இது உயரமாக இருக்கிறது. மேற்காகவும் இருக்கிறது. இதைவிட இது கீழாக இருக்கிறது. கிழக்காகவும் இருக்கிறது. இது வணிகர்கள், கைவினைஞர்கள், பொதுமக்கள் இருக்கும் இடம்.
டொலபினா என்ற நகரம் நடு நகரம், கீழ் நகரம், இடைமுற்றம். காப்பரன், திறந்தவெளிப்பகுதி, கிணறு, இது மேற்குப் பகுதியில் இருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருப்பது. இது உயரமாக இருக்கிறது. இது தாழ்வாக இருக்கிறது. இப்படி பத்துப் பன்னிரண்டு நகரங்கள் சிந்துவெளி நாகரிகம் முழுவதுமே ஒரே மாதிரியாக ஒரு டவுன் பிளானிங் அத்தாரிட்டி. இப்படித்தான் பன்னணும். அப்படின்னு அத்தாரிட்டி செய்தது போல சில இடங்களில் இரு குன்றுகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உயரமான குன்றுப் பகுதியில் மேற்குப் பகுதி (கோட்டைப் பகுதியை வைத்துவிடுவார்கள். கொஞ்சம் தாழ்வான குன்றில் இந்த நகரத்தை உருவாக்குவார்கள்.)
ஒருவேளை குன்றுப்பகுதி கிடைக்கவில்லை யென்றால் சமவெளியாகத்தான் இருக்கிறது என்றால்? அவர்களாகவே செயற்கையாகவே இரண்டு மேடைகளை ஏற்படுத்தி, உயரமான மேடை ஒன்றை எழுப்பி அந்த மேடையின் மீது இந்த மேற்குப் பகுதியை அமைத்து அங்கு கோட்டைப் பகுதியை அமைப்பார்கள். அதாவது குறிப்பிட்ட அளவினால்கூட இதைவிட கொஞ்சம் சிம்பாலிக்காவது அதுகூட இருக்கணும். அப்படி என்கிற முயற்சியை அவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதை கடந்த 90 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் பதிவு செய்து இருக்கிறார்கள். ஒருவகையில் இது ஆர்ட்டிகள் ஆஃப் பெயித். கிட்டத்தட்ட இது ஒரு மூடநம்பிக்கையாகவே இருந்தது.
ஒரு புது ஆராய்ச்சியாளர்கள், சிந்துவெளி நாகரிகத்திற்கு போய்விட்டார் என்றால், உடனே ஒரு உயரமான ஒரு குன்றைப் பார்த்துவிட்டு கோட்டை மாதிரி இருந்ததைப் பார்த்தால் உடனே அவரது மனம் கீழேதான் பார்க்கும் அல்லது கிழக்கதான் பார்க்கும். இன்னொரு டவுன் கட்டாயம் இருக்கும் என்று கூறுவார். அங்குபோய் தோண்டினால் அது கிடைக்கும். முதலில் ஒரு சின்னது கிடைத்தனால் இந்தப் பக்கம் வேறு இருக்கும். கிட்டத்தட்ட ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு இந்தப் பகுதியில், கிழக்குப் பகுதி குடியிருப்புப் பகுதியாக இருக்கும். மேற்பகுதி கோட்டைப் பகுதி என்பதை கடந்த 90 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் அறிந்து கொள்ளப்பட்ட உலகம் அறிந்த உண்மை. ஆனால், இதுவரை கேட்கப்படாத ஒரே ஒரு கேள்வி. ஏன் மேற்குப் பகுதி மேலாகவும், கிழக்குப் பகுதி கீழாகவும் இருக்கிறது? என்ற கேள்வியை எந்த ஆய்வாளரும் இதுவரை கேட்காமல் இருந்தார்கள். எனது இந்தக் கட்டுரையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தேன். இது ஒரு ஆங்கிலக் கட்டுரை. நீங்கள் இணையத்தில் படிப்பது என்றால் http://www.harappa.com/ என்ற சிந்துவெளி நாகரிகம் பற்றிய உலகினுடைய தலையாய இணையதளத்தில் பார்க்கலாம். இந்த இணையதளத்தில் இந்தக் கட்டுரை முழுவதும் வெளிவந்து இருக்கிறது.
இந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து விரைவில் தமிழில் வெளியிடப்போகிறோம். இதில், இந்தக் கேள்வியை எழுப்பி இதன் மூலமாக இது ஒரு திராவிடர் நாகரிகம் _ தமிழ் நாகரிகம் என்பதற்கான தரவுகளை சேகரித்து இருக்கிறேன். ஏனென்றால் தமிழில் மட்டும்தான் மேல் என்பது மேல்மட்டுமல்ல மேற்கும். கீழ் என்பது கீழ் மட்டுமல்ல கிழக்கும். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 168 இணைகள் மேல்பாகனூர், கீழ்பாகனூர், மேல் அணை, கீழ் அணை, மேலூர்_கீழூர், மேல்கடையூர்_கீழ்க்கடையூர் என்று இணை இணையாக வருகிற 168 இணைகளை தமிழ்நாடு முழுவதும் கண்டுபிடித்து அது கிழக்கு மேற்கிற்கு கிழக்காக வருகிறதா? கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? என்பதை இந்த 168 இணைகளுக்கும் கண்டுபிடித்து, அதுமட்டுமல்லாமல் சங்க இலக்கிய காலத்திலேயே சங்க இலக்கியத்தில் தொல்காப்பியர் _ உவமையியலில் சொல்லும்போது, உவமையியலை விளக்கிக் கொண்டு வரும்போது, உவமை என்பது மேலன _ மேலான ஒரு விஷயத்தை சொல்லத்தான் உவமையாக சொல்லணும். அதே நேரத்தில் சில நேரங்களில் விதையினுடைய தேவைக்காக ஒரு பொருளைவிட உவமமாக சொல்லப்படுகிறது. ஒரு பொருளைவிட சிறப்பு தாழ்ந்த ஒரு பொருளையும், உவமையாக சொல்லலாம். உதாரணம்: ஒரு எருமை மாதிரி இருந்தான். கழுதை மாதிரி இருந்தான். இந்த மாதிரி ஒரு உவமைகளையும் சொல்லலாம். அப்படியென்று சொல்லும்போது கிழக்கெடு பொருள் என்ற சொல்லை பயன்படுத்துவர். கிழக்கிடும் பொருள். கிழக்கிடும் பொருள் என்று தொல்காப்பியர் பயன்படுத்துவார். இந்த கிழக்கிடும் பொருளுக்கு அடியார்க்கு நல்லார், பேராசிரியர் நச்சினார்க்கினியர் இவர்களுடைய உரைகளையெல்லாம் பார்க்கும்பொழுது கிழக்கிடும் பொருள் என்பது கீழான பொருள். ஏனெனில் கிழக்கு என்பது கீழ் அப்படி என்று விளக்குவோம்.
அதேமாதிரி மேற்கு சினை வாங்கும் அப்படின்னு சங்க இலக்கியத்தில் இருக்கும். மேற்கு வாங்கும் சினைமேற்கு என்றால்? மேல போறது மேற்கு என்பது மேல் என்பதும். கிழக்கு என்பது கீழ் என்பதும், தொல்காப்பியர் காலத்திலிருந்து சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு புவியியல் உண்மை. ஏன் என்றால், தீபகற்ப இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை உயரமாகவும், கிழக்கு கடற்கரை தாழ்வாகவும், இருப்பதால். ஒரு நேச்சுரல் கிரேடியண்ட் அது சார்பாகவே மேற்கிலிருந்து கிழக்கு வாட்டாக ஒரு சரிவு இருக்கும்.
அதனால், இயற்கையாக அமைந்த ஒரு விஷயம். இந்த (இயற்கையாக அமைந்த விஷயத்திற்கு முன்னால்) சிந்துவெளி நாகரிகப் பகுதியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா, இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய சுலைமான் மலை. வேற அங்கு வந்து நாம் மலை, குன்று, கொற்கை, வஞ்சி, தொண்டி, இந்த மாதிரி ஊர்ப் பெயர்களெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோமோ! அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய சுலைமான் மலை. 1489 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயரம். ஹரப்பா 167 மீட்டர், சுலைமான் மலை இருக்கு 525 மீட்டர். இது வந்து சிந்துவெளி நாகரிகம் வருவதற்கு முன்னாலயே இருந்த ஒரு மெகர் கார்டு என்கிற இடத்தில் இருக்கக் கூடிய குடியிருப்பு. இந்த மெகர் கார்டு குடியிருப்புகள்தான் சிந்து சமவெளி நாகரிகத்தினுடைய மூதாதையர் மாதிரி அதற்கு ஒரு வேர் மாதிரி. ஒரு (Root of the Civilization) இந்த சிவிலிசேசன்லதான் நாகரிகத்தினுடைய அடித்தளங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கிருந்து வந்துதான் மக்கள் மொகஞ்சதாரோ நாகரிகத்தை அமைக்கிறார்கள். இங்கு 152 மீட்டர் குடியிருப்பு இருக்கு. இந்த கீர்த்தார் மலைத்தொடர் 1260 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருக்கு.
மொகஞ்சதாரோ 59 மீட்டரில் இருக்கு. இதில் மேற்கு -_ கிழக்கு என்ற சரிவு சிந்துவெளி நாகரிகத்தினுடைய ஒரு இயற்கையான புவியியல் பின்னணியாக அமைந்திருக்கிறது. அந்த அமைப்பை உள்வாங்கிக்கொண்டு. ஒரு நகர அமைப்பை இந்த மக்கள் அமைக்கும்போதுதான், திராவிட பழங்குடியில் இன்றைக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கக்கூடிய பல திராவிடர் பழங்குடியினர்களை நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம். அவர்களெல்லாம் தங்கள் வீட்டை அமைக்கும் முறை. குடியிருப்புகளை அமைக்கும் முறை. எல்லாவற்றிலுமே ஒரு மேற்குப் பகுதியை உயர்வாகவும் _ கிழக்குப் பகுதியை கீழாகவும் வைத்திருக்கிறார்கள். தஞ்சாவூர் பகுதியில் பார்த்தீர்களேயானால் மேல்_பாதி, கீழ்_பாதி, மேல்_நீர், கீழ்_நீர், அப்படி என்று வைப்பாங்க. குத்தகைக்கு விடுகிறவர்கள் மேற்பாதி. அப்படித்தான் அவர்களுடைய குத்தகைப்பகுதி அந்த நில உரிமையாளர் பகுதி மேற்பகுதி. மேற்பாதி சொல்வார்கள். அதே மாதிரி தண்ணீர் பாய்கிறதைக்கூட பாசன நீர் போகும்போது மேல் நீர் _ கீழ் நீர் என்று சொல்லுவார்கள். ஏனென்றால், மேற்குப் பகுதியில்தான் முதலில் காவிரியிலிருந்து தண்ணீர் வரும். அதே மாதிரி கிழக்கு கீழ்_கல்லணைகள் என்று சோழர் கல்வெட்டுகளில் வரும். கீழ் கல்லணைகள் என்றால், கைவினைஞர்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகள்.
இந்த மேல்_கீழ் என்கிற அமைப்பு இதற்கு நேர்மாறாக இந்தோ_ஆரிய மொழிகளில் சமஸ்கிருதம் உட்பட இந்தோ_ஆரிய மொழிகளை ஒப்பீடு செய்து பார்த்தபோது திராவிட மொழிகள் திசைகளுக்குப் பெயரிடும்போது மேற்கு, கிழக்கு, மேல்_கீழ் என்று பெயரிடும்போது ஒரு நிலை அமைப்பைச் சார்ந்த புவி மய்யக் கோட்பாடு. அதாவது எகோப்போ சென்ட்ரிக் அப்ரோச் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். ஒரு புவி மய்ய கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. எது உயரமாக இருக்கிறதோ, எது மேலாக இருக்கிறதோ, அது மேற்கு. எது கீழாக இருக்கிறதோ, கிழக்கு என்ற புவி மய்யக் கோட்பாடு.
ஆனால், சமஸ்கிருதம் உட்பட்ட இந்தோ, ஆரிய மொழிகள் அனைத்தும் ஒரு மனித மய்ய கோட்பாட்டை முன் பின் அமைப்பிலேயே இந்த பெயர்களை வைக்கிறது. சூரியனுக்கு முன்னால் ஒரு மனிதன் நிற்கும்போது. எது முன்னால் இருக்கிறதோ அது கிழக்கு. எது பின்னால் இருக்கிறதோ அது மேற்கு. பூரப் என்று சொன்னால் சமஸ்கிருதத்தில் கிழக்கு என்று பொருள். பஸ்சிம் என்று சொன்னால் மேற்கு என்று பொருள். பிராச் என்று கூறினால் பிராச்சி என்றாலும் கிழக்கு. இதிலிருந்துதான் From, Frent, Fort அப்படிங்கிற ஆங்கிலச் சொற்கள் வரும். எது முன்னால இருக்கிறதோ அது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு.
– (தொடரும்)
தொகுப்பு: அ.பிரபாகரன்