எச்சரிக்கை

மே 16-31

புதிய ஆடைகளை உடுத்தும்போது……..

நகைக்கடைகளில் நகைகளை அணிந்து கண்ணாடியில் பார்த்து வாங்குவதைப் போல ஜவுளிக்கடையில் ஆடைகளை உடுத்திப் பார்த்து வாங்கும் வழக்கத்தைப் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர்.

புதிய உடைகளை அணிந்து பார்க்கும் அறையினுள் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி கள் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி தானா என்பது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, உடைகளை அணிந்து பார்க்கும் அறைக்குச் (ட்ரயல் ரூம்) சென்று அணிந்து பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். அணிந்து பார்த்துத்தான் வாங்க வேண்டும் என நினைத்தால், உங்கள் விரல் நுனியைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள்.

அப்போது உங்கள் விரலுக்கும் கண்ணாடிக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பின், அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதான். இடைவெளி இல்லாமல், உங்கள் விரல் நுனி படும் இடத்திற்கு அருகிலேயே கண்ணாடியின் பிம்பம் தெரிந்தால், அது உங்களைப் படம் பிடிப்பதற்கு வைக்கப்பட்ட கண்ணாடி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தச் சோதனையில் குழப்பம் இருப்பின், உங்கள் செல்பேசியில் இருந்து யாருக்காவது பேசுவதற்கு எண்ணை அழுத்துங்கள். செல்பேசியிலிருந்து தொடர்பு கிடைக்கவில்லை (கால் போகவில்லை) என்றால், அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பைபர் ஆப்டிக் சிக்னல் செல்பேசியின் சிக்னலைத் தடுக்கக்    கூடியது என்பதால், நீங்கள் உஷாராக இருந்து வெளியேறிவிட வேண்டும்.


குடும்ப வன்முறைச் சட்டம்

மும்பையில் கல்யாண் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2010ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஆணையிட்டார். 2011 ஆகஸ்ட் 8 அன்று, கல்யாண் செஷன்ஸ் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து, குடும்ப வன்முறைச் சட்டத்தை, தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார். மேலும், தனது மனைவி குடும்ப வன்முறைச் சட்டத்தின் 23 ஆவது பிரிவின்படி குறிப்பிட்ட படிவத்தில் புகாரைத் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ரோஷன் தால்வி, மனுவைத் தள்ளுபடி செய்து பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார். பெண்களுக்கு நீதியை அதிகரிக்கும் விதமாகவே குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு ஏமாற்றம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

சித்ரவதைக்கு உள்ளாகும் பெண், இந்தச் சட்டத்தைக் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினருக்கு எதிராக மட்டுமின்றி, பெண் உறுப்பினர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *