நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.
மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கோவா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற் றுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் 2012ஆம் ஆண்டு 570 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் டில்லியிலிருந்து 105 புகார்களும், ஆந்திராவிலிருந்து 43 புகார்களும், தமிழகத்திலிருந்து 8ம் வந்துள்ளன என்று மத்திய அமைச்சர் அகமத் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள்-.
சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித் துள்ளது. உலகின் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக தென்னாப் பிரிக்கா திகழ்கிறது. இங்கு, 3 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.
11-17 வயது வரையிலான 6 குழந்தைகளில் ஒருவர் அதாவது 16.5 சதவிகிதம் பிரிட்டனில் (U.S) பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க, அய்க்கிய நாடுகளில் (U.K) 1992-2010 வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இந்தோனேஷியாவில் 2012ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது பதிவான 2,367 வன்முறை வழக்குகளில் 62 சதவிகிதம் பாலியல் வன்முறை தொடர்பானது என்றும், கனடாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 54 சதவிகிதத் தினர் தேவையில்லாத பாலியல் கவனத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.