வாலிவதங்கள் இன்றும்
தொடர்கின்றன!
தமிழக அரசியலில்
வாலியின் பெயர்
கருணாநிதி!!
அவருக்கெதிரான
ராமர்கள்
ஒளிந்திருந்து
போர்தொடுக்கும்
மரத்தின் பெயர்
நடுநிலை!!!
ராமநவமி நல்வாழ்த்துகள்!!!!!!
எதிரொலி தமிழ், 2013 ஏப்ரல் 19, காலை 10.48 மணி
இந்து கடவுள் இல்லன்னு ஸ்டேடஸ் போட்டா இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் சந்தோஷப்பட்டு லைக் போடுறாங்க…
கிறிஸ்துவ மதத்தைக் கேள்வி கேட்டு ஸ்டேடஸ் போட்டா பொங்கும் சிரிப்போட இந்துக்களும்…. இஸ்லாமியர்களும் லைக் போடுறாங்க…
இஸ்லாமியத்தை விமர்சிச்சு பதிவு செஞ்சா கிறிஸ்தவர்களும் இந்துக்களும் வெறியோட வந்து லைக் போடுறாங்க…
ஆனா ஒரே நேரத்துல மூணு கடவுளும் இல்லன்னு சொன்னா சண்டைக்கு வராங்க…. கணக்கு தப்பா வருதே … ஏன் ????? ஏன் ???? ஏன் ????
விக்ராந்த் உயிர் நண்பன், 2013 ஏப்ரல் 18, இரவு 10.19
ராமநவமி ஆம்… ஆனால் ராமன் பொருள் தெரியுமா? என்று ராமன் பற்றி தினமலர் ஒரு விளக்கம் எழுதி இருக்கு.. ராமனை இராமன் என்று முழுமையாக எழுதுவர். இரா என்றால் இரவு. மன் என்றால் தலைவன். இரவுக்குத் தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள்.
இந்த விளக்கத்தைப் படித்ததும் எனக்கு 23 ஆம் புலிகேசி மாதிரிதான் பேசத் தோணுது…
ராமா நீ ஒரு மாமா பெண் விடயத்தில் நீ ஒரு முள்ளமாறி
ஆன்மிகம் என்கிற போர்வையில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி
மறைந்து நின்று கொல்வதில் நீ புண்ணாக்கு
பார்ப்பனியத்தை அடை காக்கும் அண்டங்காக்கையே
பெரியாரிடம் செருப்படி வாங்கியும் சொரணை இல்லையே
ராமா மொத்தத்தில் நீ ஒரு போலி.
பரணீதரன் கலியபெருமாள், 2013 ஏப்ரல் 18, இரவு 8.21
இவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் இறங்குகிறார் இறங்குகிறார் இன்னும் இறங்கிட்டே இருக்கிறார் இன்னும் கரையேறுவதாகவே இல்லை உங்களால இதையே சரியா செய்ய முடியவில்லையே நீங்கள் எப்படி நாட்டு மக்களுக்கு நல்லதப் பண்ண போறிங்க?
வைகை ஆற்றில் நவீன முறையில் இப்போது பாலமும் போட்டாசு, ஏன் இன்னும் கீழ இறங்கியே போகணும்? பாலத்துமேலேயே போகலாமே?
அழகருக்கும் மீனாட்சிக்கும் ஏதாச்சும் சண்டையா?
அப்படி சண்டையா இருந்தா மகளிர் காவல்நிலையம் இருக்கு, பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
நீச்சல் தெரியவில்லையா? நீச்சல் கற்றுக் கொடுக்க
குற்றாலீஸ்வரன் இருக்கிறார் அவரை வைத்துக் கற்றுக் கொடுக்கச் சொல்லிடலாம்……. பிறகு என்ன?
ஈரோட்டுப் பூகம்பம், 2013 ஏப்ரல் 24
திருநங்கைகளுக்குச் சரியான வேலை வாய்ப்புத் தராமல் அழகுப் போட்டி வைப்பதும். கூவாகத்தில் தாலி கட்டி அறுத்து வருடம் தோறும் அழும் திருவிழாவைத் தடை செய்யாமல் இருப்பதும் அவர்களுக்கு எந்த விதத்தில் உதவும்..? புராணப் புரட்டுகளைத் தொடர்வது அறிவுடைமையா?
சொல்கேளான் ஏ.வி.கிரி, 2013 ஏப்ரல் 24, காலை 7.40
ஒரு குடும்பத்தை நிர்வகித்து.., வீட்டுச்சூழலைச் சமாளித்து, பணப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, வெளியிடங்களுக்குச் சென்று., நடுவில் அவளைப் பற்றி நல்லதும் கெட்டதும் பேசும் உறவுகளைச் சமாதானப்படுத்தி, சமைத்து…, குழந்தை, கணவனைக் கவனித்து, காலையிலிருந்து இரவு வரை எல்லாப் பணிகளையும் நிறைவு செய்துவிட்டு, படுக்கும் போது, அவளுக்கு அசதியாக இருந்தாலும் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு.. தூங்கும்முன் அடுத்த நாளில் இருக்கும் வேலைகளை நினைத்துக்கொண்ட அப்பெண்…., இடையிடையே கிடைக்கும் இடைவெளியில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டு இருக்கிறாள்…….
பிரதிபா பிரதி, 2013 ஏப்ரல் 24, நண்பகல் 1.50 மணி
மாப்பிள்ளை சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறாராம்…
உன்னையும் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போய்டுவாராம்…
நீ அங்க போய் அவருக்குச் சமைச்சுக் கொடுத்து மத்த வேலையெல்லாம் பார்த்தாலே போதுமாம்..
மாப்பிள்ளைக்குக் கைநிறைய சம்பளமாம்…
உனக்கு வேணுங்கிறதெல்லாம் வாங்கித் தருவாரு…
உனக்கு வேற எந்தக் கஷ்டமும் இருக்காதாம்…
நீ படிக்கக்கூட வேண்டாம்..
அந்த மாப்பிள்ளையையே கட்டிக்கோடி.. என்றாள் அம்மா, பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் மகளிடம்…
ஏம்மா… என்னைய அடிமாட்டைவிட கேவலமா விற்கப் பார்க்குற..? என்று நெற்றிப் பொட்டில் அடித்தார்போல் கேட்டதில் அடங்கியிருந்தாள் அம்மா.
தீபா வெண்ணிலா, 2013 ஏப்ரல் 23, பிற்பகல் 1.43