Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சென்னையின் திருவொற்றியூர், வேளேச்சேரி, திருமங்கலம் போன்ற இடங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், வெளியில் இருந்து வருகிற மக்கள் பார்க்கும் சென்னையின் பொதுமனம் எப்போதும் வேறானதாகவே இருக்கிறது, உண்மையில் அவர்கள் ஒருபோதும் சென்னையின் இதயத்தைப் பார்த்ததில்லை, சென்னையின் இதயம் அதன் உட்புறமான தெருக்களில், நெடிய உப்புக் காற்றடிக்கும் கடற்கரைக் குடிசைகளில், ஒன்று கூடி விளையாடும் பொதுவிடங்களில் என்று அலாதியானது.

இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற 'இழி நிலை' மிக மோசமானது,

தலித்தாக இருப்பின் ஒரு 'மாநில முதல்வரானாலும்' அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மை படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.

தலித் மக்களின் இருப்பிடத்தை குறித்து 'ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் 'பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அது தான் ஒரே பிரச்சினை'என்பதுமாகவும் ,

மெட்ராஸ்..

நகரத்து சேரிகளுக்கும் கிராமத்து சேரிகளுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. நகரங்களில் ஒப்பீட்டளவில் பணப்புழக்கம் அதிகம். ஆண்டைகள் வெவ்வேறு விதமான முகமூடிகளோடு திரிவார்கள். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதில் மாற்றமில்லை. வடசென்னை மக்களை தலித், தலித் அல்லாதோர் என பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரம் இருக்கிறது.