1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி.
2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் செய்யாறு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம்.
3. 1953 – சி.ஆர். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து செய்யாறு ஆரம்பப் பள்ளி முன் மறியல்.
4. 1956 இராமர் படம் எரிப்பு; முன் கூட்டியே கைது.
5. உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம்.
6. ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் முன் கூட்டியே கைது.
7. 1974 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வலியுறுத்த செய்யாறு அஞ்சல் அலுவலகம் முன் மறியல்.
8. அன்னை நாகம்மையாரை இழிவுபடுத்தி எழுதிய அரசவைக் கவிஞர் கண்ணதாசனைப் பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன் மறியல் – சென்னை மத்திய சிறையில் 15 நாள் தண்டனை.
9. 1981இல் மனுநீதி எரிப்புப் போராட்டம்.
10. 30.8.1985இல் ஈழத் தமிழர் உரிமைக்காக இரயில் நிறுத்தப் போராட்டம் – 13.9.1985 வரை வேலூர் மத்திய சிறை.
அநேகமாக இவர் கலந்து கொள்ளாத இயக்கப் போராட்டங்கள் இல்லை என்றே கூறலாம்.
