மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஆப்பிரிக்காவையே அதிரவைத்த போதைப் பொருள் கடத்தல் தலைவி முன்னாள் ஹிந்தி நடிகை மம்தாகுல்கர்னிக்கு கும்பமேளாவில் சாமியார்களுக்கு எல்லாம் தரப்பும் உச்சப் பதவியான மகாமண்டலேஷ்வரி பதவி வழங்கப்பட்டது. கும்பமேளாவில் முழுக்கு போட்டு புனிதத் துறவியாக(சாமியாரிணியாக) மகாமண்டலேஷ்வரினியாக மாறிய மம்தா குல்கர்னி யார்?
1990களில் மம்மதா குல்கர்னி சிறிய காட்சிகளில் நடித்து பின்னர் தன்னுடைய கவர்ச்சி யான நடிப்பில் நாயகியாக உருவாகிறார்.
1990களில் நடுப்பகுதி குல்கர்னி மும்பை தாதாக்களோடு பழகி போதைப் பொருள் கடத்தல் மற்றும் மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்குப் பணம் கடத்தி கொடுப்பதாகச் செய்திகள் வெளியானது, தாவூத் இபராகிமின் முன்னாள் நண்பரும் பிரபல தாதாவுமான சோட்டா ராஜனோடு
இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்.
இவர் மீது காவல்துறை தேடுதலைத் துவங்கிய பிறகு தன்னுடைய போதை மற்றும் இதர மிரட்டல் தொழில்களை முதலில் வளைகுடா நாடுகளில் இருந்தும் பின்னர் மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நடத்தி வந்தார்.
* 2016 கென்யாவில் ஒரு பெரிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்குகிறார். அப்போது அவருடைய சொத்து மதிப்பு இந்திய
ரூபாயில் 2500 கோடியைத் தாண்டுகிறது.
இவருக்கு துணையாக விக்கி கோஸ்வாமி என்ற மற்றொரு பன்னாட்டுப் போதைப் பொருள் கூட்டத்தின் தலைவன் இருக்கிறார்.
இவர் பிடிபட்ட பிறகு மம்தா குல்கர்னி இந்தியாவில் பெரும் போதைப்போருள் வணிகத்தின் வலைப்பின்னலை வழி நடத்துகிறார் என்று கூறுகிறார்.
இதன் அடிப்படையில் மம்தா குல்கர்னி குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார், இந்தியாவில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவராத ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து என்ற குட்டி நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ளவரோடு நெருக்கமாக இருக் கிறார். இதன்மூலம் அவரது சொத்து மதிப்பு 25 ஆயிரம் கோடிகளாக மாறுகிறது.
2017 கென்யாவில் மம்தா குல்கர்னி கைது செய்யப்படுகிறார்.
பெரிய மனிதர்களின் தலையீட்டால் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
* 2020 மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்து விமான நிலையங்களிலும் சிவப்புக்கார்னர் உத்தரவு பிறப்பிக்கிறது.
*2024 இந்த நிலையில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் இவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறி ஒன்றிய அரசின் அறிக்கை அடுத்து போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இதனை 12.01.2025 அன்று உடனடியாக குல்கர்னி இந்தியாவுக்குத் திரும்புகிறார். விமான நிலையத்தில் தான் நிரபராதி என்றும்
தான் இதுவரை எந்த ஒரு சிறிய உயிரினத் திற்கும் தீங்கு விளைவிக்கவில்லை என்றும் கூறுகிறார்.
24.1.2025 அன்று மம்தா குல்கர்னி சாமி யாரிணி ஆகிறார். பிரயாக்ராஜில் மகா கும்ப் மேளாவில் கின்னர் ஆசிரமத்தின் மகாமண்ட
லேஷ்வரி என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
துபாய் ஆப்பிரிக்காவின் ஸ்வாசிலாந்து, போஸ்னியா, டான்சானியாரின் சான்சிபார், தர்- அஸ்லாம் போன்ற நாடு மற்றும் நகரங்களில்
உள்ள இவரது சொத்துமதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் முப்பதாயிரம் கோடிகள் ஆகும்
இதுதான் மோடியின் புதிய இந்தியா.