திருமண வாழ்வுக்கு புரிதல் தேவை!
காதல் எனும் பெயரால், அறியாமை யால், பாலியல் இனக்கவர்ச்சிக்கு இரையாதல், அதன் தொடர்ச்சியாக, திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலையை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றுக்கெல்லாம் காரணம் பாலியல் உறவில் முன்அனுபவம் இன்மையே என்பது ரசலின் கருத்தாகும். இதுபற்றி ரசல் அவர்களின் கருத்துக்கள் வருமாறு:-
– தஞ்சை பெ. மருதவாணன்
அ) 1. மணமாகும் போது ஒரு பெண் கன்னியாக (Virgin) இருக்க வேண்டும் எனும் கட்டாயமிருப்பின் நிலையில்லாத (அற்பமான) பயனற்ற பாலியல் கவர்ச்சிக்கு அவளைப் போன்றவர் இரையாகும் நிகழ்ச்சியினை அடிக்கடி காண்கிறோம். அத்தகைய கவர்ச்சி உண்மையான காதலிலிருந்து வேறுபட்டிருப்பதை பாலுறுவு அனுபவமுள்ளவள் எளிதில் அறிய முடியும். இதுவே (இரண்டுக்குமுள்ள வேறுபாட்டினை அறியாத பேதைமை) மகிழ்ச்சியில்லாத பல திருமணங்களுக்குக் காரணமாயிருந்துள்ளது. (136/137) (If a girl is expected to be a virgin when she marries, it will very often happen that she is trapped by a transient and trivial sex attraction which a woman with sexual experience could easily distinguish. This has undoubtedly been a frequent cause of unhappy marriages. (Marriage and Morals. Chapter IX. The place of love in human life. Pages 123-124)
2. மக்கட்பேற்றுக்கு வழிகோலும் முக்கியத்துவம் வாய்ந்த திருமண உறவைஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ முன் அனுபவம் இல்லாமல் மேற்கொள்வது விரும்பத்தகாதது என்று கூறுகிறேன். முன்னரே பாலுறவு அனுபவ அறிவுள்ளவருடன் ஒருவர் தன்னுடைய முதல் பாலின்ப உறவு கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகள் உள்ளன. மானிடரிடையே காணும் பாலின்ப உறவு இயல்புணர்ச்சியால் விளைவதன்று. “பரிசுத்தமடையும்” கடமையாக ஈடுபடுவதை நிறுத்தியதிலிருந்தே அவ்வுறவு இயல்புணர்ச்சியினால் எழுவதில்லை. அதுவேயன்றி வாழ்நாள் முழுதும் நீடிக்கக்கூடிய உறவு முறையில் பாலுறவு ஈடுபாட்டுக்கான தம்முடைய பொருத்தத்தை முன்கூட்டியே அறியாமல் மக்களை ஈடுபடுமாறு செய்வது அருத்தமற்றதாகும். ஒரு வீட்டை வாங்க நினைப்பவனை அவ்வீட்டை அவன் முன்கூட்டியே பார்க்க அனுமதிக்காமலே வாங்கச் சொல்வது போன்ற தவறு இது. (182) (I should not hold it desirable that either a man or a woman should enter upon the serious business of a marriage intended to lead to childen without having had previous sexual experience. There is a great mass of evidence to show that the first experience of sex should be with a person who has previous knowledge. The sexual act of human beings is not instinctive and apparently never has been since it ceased tobe performed “a tergo”. And apart from this argument it seems absurd to ask people to enter upon a relation intended to be life long without any previous knowledge as to their sexual compatibility. It is just as absurd to ask people to enter upon a relation intended to be life long without any previous knowledge as to their sexual compatibility. It is just as absurd as it would be if a man intending to buy a house were not allowed to view it until he had completed the Purchase. (Marriage and Morals. Chapter XII Trial marriage page 166)
3. தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற கருத்தினை ஒருவர் கூற வேண்டுமானால் அவருக்கு எத்தகைய சிந்தனைத்துணிவு இருந்திருக்க வேண்டும் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவே நமக்கு வியப்பாக இருக்கிறது. ரசலின் இருக்கருத்தைப் படிப்பதும் கேட்பதும் பாவம் என்றும் ஒழுக்கக் கேட்பதும் பாவம் என்றும் ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்கும் என்றும் மதபீடங்களும் பிற்போக்கு உலகமும் குய்யோ முறையோ என்று அலறித்துடித்தன. இத்தகைய கருத்துகள் இன்றுள்ள சமுதாய அமைப்பில் (அதிர்ச்சியூட்டும்) புரட்சிகரமானவை என்பதில் அய்யமில்லை.
4. ரசல் அவர்களின் மேற்கண்ட கூற்றுகளில் அடங்கியுள்ள உண்மையான வாழ்வியல் நோக்கங்களை வழிமொழியும் வகையில் “ரசல் ஓர் அறிவியல் மேதை” எனும் கட்டுரையில் பி.பூவராகன் என்பவர் (இந்தியப் பகுத்தறிவாளர் கழகம் வெளியிட்டுள்ள (1972) ரசல் நூற்றாண்டு பிறந்தநாள் மலரில்) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: ரசலின் ஆண் – பெண் உறவு பற்றிய கருத்துகள்
வாழ்க்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. வாழ்க்கையில் நடைபெறும் பொறாமை, பழிச்சொல், இழிசொல் ஆகியவைகளை நீக்கத் துணைபுரிபவை.சுருங்கக்கூறின். உடற்கூரையும் உளவியலையும் அடிப்படை
யாகக் கொண்டவை. ரசலின் கருத்துகள் இன்றுள்ள சமுதாய அமைப்பில் புரட்சிகரமானவை
தாம். ஆனால் அவை சமுதாய ஒருதலை நியதிகளை மாற்றி அமைக்க விழைபவை என்பது மறுக்க முடியாத பேருண்மை.
ஆ) 1. திருமண வாழ்வு நிலைபெற பாலுறவில் முன் அனுபவம் தேவை எனும்
ரசலின் கருத்தினைக் குறித்து, தந்தை பெரியார் அவர்கள் நேரடியாக எதுவும் கூறவில்லையெனினும் ரசலின் கருத்தில் உட்பொருளாய் அமைந்துள்ள உண்மையான வாழ்வியல் நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் பெண் ஏன் அடிமையானாள் எனும் தனது நூலின் மூன்றாவது அத்தியாயத்தில் “காதல்” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ள
தாவது:- பலகீனமாக இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்ட பிறகு தவறுதலைத் திருத்திக் கொள்ள முற்படுவதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து
கொள்ள முயலுவதும் இயற்கை அல்லவா?… இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்
கொண்டே வந்தால் ஒத்த காதலாகிவிடுமா?
2. ரசலின் கருத்தை எதிரொலிக்கும் வண்ணம், தனது அய்ரோப்பியப் பயணத்தின் போது 1932இல் ஜெர்மனியில் தான் நேரில் காண நேர்ந்த காட்சி ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்:- நான் 1932ல் ஜெர்மனி சென்றிருந்தேன்.
அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை proposed Husband and wife என்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். நாங்கள் உண்மையான கணவன்-மனைவியாக திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம் என்றார்கள். “எவ்வளவு காலமாக” என்று கேட்டேன். “எட்டு மாதமாக” என்றார்கள் எப்படி இருக்கிறது பாருங்கள். அந்த நாடு முன்னேறுமா? பதிவிரதம் பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா? (பெங்களூரில் 23, 24.6.1973இல் சொற்பொழிவு ‘விடுதலை’ 28.6.1973)
உண்ணும் உணவும் பருகும் நீரும் போன்றதே பாலுறவு உணவருந்தி நீர் பருகுவது போலவே பாலுறவின்ப நுகர்ச்சியும் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை என்பது ரசலின் கருத்து. தனது நூலின் 20ஆவது அத்தியாயத் தில் பாலுறவு உணர்ச்சியும் மானிட ஆற்றல்களும்(The place of sex among human valves) என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:-
உணவும் நீரையும் போல பாலுறவின்பமும் இயற்கையான தேவை. அது இல்லாமல் மனிதன் வாழ முடியும். ஆனால் உணவு குடிநீரின்றி ஒருவர் வாழ முடியாது என்பதும் உண்மையே. ஆனால், மனோதத்துவத்தைக் கவனிக்கையில் பாலுறவின்ப அவாவும் உணவு, தண்ணீரின் மீது ஏற்படும் விருப்பம் போன்றதேயாகும்… உணவையும் நீரையும் போலவே பாலுறவின்ப ஆசையையும் தடை செய்தால் அது மிக அதிகமாகப் பெருகிவிடும்(313)… பாலுறவில் தகாதவாறு கவனம் செலுத்துவதைத் தீமை என்று மீண்டும் நான் கூறுகிறேன்(314)… உணவு விஷயத்திலுள்ள கட்டுப்பாடுகளைப்போல பாலுறவு குறித்து எந்த சுயகட்டுப்பாடும் தேவை இல்லை என்றோ அல்லது ஒழுக்க நெறி வேண்டாமென்றோ நான் சொல்லவில்லை(315).
(Sex is a natural human need like food and drink. It is true that man can survive without it whereas they cannot survive without food and drink, but from a Psychological stand point the desire for sex is precisely analogous to the desire for food and drink……. Moreover as in the case of food and drink, the desire is enormously stimulated by Prohibition (291-292)…… I wish to repeat however as emphastically as I can that I regard an undue preoccupation with this topic as an evil (292) I am not suggesting that there should be no morality and no self restraint in regard to sex any more than in regard to food(293) (Marriage and Morals Chapter XX the place of Sex in human valves)
ஆ) தந்தை பெரியார் அவர்கள் பாலுணர்ச்சி யைப் பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துகள் வருமாறு :
(பாலுணர்ச்சி தொடர்பாக) இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததாகும்.
(பெண் ஏன் அடிமையானாள் – அத்தியாயம் மூன்று காதல்)
(தொடரும்)