Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இராஜராஜசோழனின் வில்லும் வாளும்!

 

நாளிதழ் ஒன்றில் +2 தமிழ் முதல்தாள் பொதுத்தேர்வுக்கான மாதிரி வினா-விடை வெளியாகியி ருந்தது.அதில் இராஜராஜசோழனின்  வில் ஒரு அம்பினை விடுத்து பெருங்கடலே வற்றும்படி செய்தது என்றும் அவனது வாள் காவிரி ஆறு சோழநாடு செல்வதற்காக சைய மலையை வெட்டி வழிவிட்டதோடு, வானத்தில் அசைந்த அசுரர்களின் நகரத்தையே அழித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இராஜராஜசோழன் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்.அவனை பற்றி குறிப்பிடும் போதே இப்படி அறிவியலுக்கு உட்படாத புனைக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் கற்பனைக் கதைகளான இராமாயணம், மகாபாரதம் பொன்றவற்றை பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இவற்றை பார்க்கும் பொழுது தமிழ் மொழி அறிவு வளர்ச்சியடையாத காட்டுமிராண்டி மொழியாக உள்ளது என்று பெரியார் அவர்கள் சொன்னது எவ்வளவு நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரிகிறதே!

-_ மீரா