‘மறுபிறப்பில்’ எனக்கு நம்பிக்கை இல்லை

அக்டோபர் 16-31

கேள்வி: மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

குஷ்வந்த சிங்: இல்லை. மறுபிறப்பு என்பது படுஅபத்தமான விஷயம். எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. நாம் எங்கிருந்து வந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பிறகு நாம் எங்கே போகப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது!

கேள்வி: மதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

குஷ்வந்த் சிங்: எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. மதம் என்பது மனத்தின் மாயை. நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த வாழ்க்கையின் முடிவு பற்றி ஒன்றும் தெரியாது. இவைபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் மதத்தைப் பற்றி பேசுவதால் என்ன பயன்? விளையப் போவதும் என்ன? என்னைப் போன்று கடவுளை மறுப்பவன்  மதத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

தலைப்பு: குஷ்வந்த் சிங்குடன் ஒரு நேர்காணல்! நேர்காணல்: ராகவன்தம்பி

காலச்சுவடு (ஆகஸ்ட் 2012 பக்.31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *