Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலை – இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரியார் கலை இலக்கிய அணி முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்! வணக்கம்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களால் காலம் கருதி தொடங்கப்பட்டுள்ள பெரியார் கலை இலக்கிய அணி அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. எனவே, பெரியார் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்கள் (கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவோர்) மற்றும் ஆடல், பாடல், இசை, நடிப்பு இசைக் கருவி இசைத்தல், தந்திரக் கலை, ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், லாவணி பாட்டுடன் கதை சொல்லல், குறும் படம் தயாரித்தல் போன்றவற்றில் ஆற்றலும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு உடன் தொடர்புகொண்டு தங்களின் விருப்பத்தை முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் முனைந்து, விரைந்து செயல்பட்டு தங்கள் பகுதியில் உள்ள மேற்கண்ட திறன் படைத்தோர் பட்டியலைத் திரட்டி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

மஞ்சை வசந்தன்,
இலக்கிய அணி செயலர்

சித்தார்த்தன்,
கலைத் துறை செயலர்

 

தொடர்புக்கு:

மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 50, ஈவிகே சம்பத் சாலை, சென்னை – 7. தொடர்பு எண் : 94442 10999