மல்யுத்த வீராங்கனைகளின் போர்க்குரல்!

2024 செப்டம்பர் 1-15

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றிப் பலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. 2023 ஜனவரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் நடத்திய போராட்டம் இப்பிரச்சினையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. சாக்சிமாலிக், வினேஷ் போகத், பஜ்ரங்புனியா உள்ளிட்ட வீராங்கனைகள் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் என்பவரும், சில பயிற்றுநர்களும் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடங்கி, நாடாளுமன்றத்திற்கு முன்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிக்காக இன்னும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது நெருக்கடிகளும் உளவியல் தாக்குதல்களும் தொடர்கின்றன.

இதில் வினேஷ் போகத் என்ற வீராங்கனை 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சார்பாகத் தேர்வாகித் தயாராகிக் கொண்டிருந்தபோது 50 கிராம் எடை கூடிவிட்டதாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டி அவரை நிறுத்தி வைத்தது. இதற்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை.