பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் வற்புறுத்தியும், துன்புறுத்தியும் 300 பெண்களுக்கு மேலானோரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய செய்தி கடந்த 2024 ஏப்ரல், மே மாதங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற அவர், இந்தியாவிற்குத் திரும்பியதும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அரசல் புரசலாக அவரைப் பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த காலத்தில்தான் பிரதமர் மோடி அவருக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சினை பெரிதாகி ஆதாரங்கள் வெளிவந்த பின்னர்தான் நடவடிக்கைகள் தீவிரமாகின.
