திருச்சி ஹோலிகிராஸ் தன்னாட்சிக் கல்லூரியில் மட்டுமே புனர்வாழ்வியல் துறை (BRSc – Bachelor of Rehabilitation
Science) பாடப்பிரிவு இருக்கிறது, பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு இது. சிறப்புத் தேவை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவே 1983இல் இந்தப் படிப்பு இங்கு தொடங்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது.
‘‘மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆரம்ப கால கண்டறிதலில் தொடங்கி, அவர்களுக்கு நல்ல ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கிற வரைக்குமான அனைத்துவிதமான பயிற்சியும் பிராக்டிக்கலாகவும், தியரியாகவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2016இல் ஆர்.டி.டபிள்யூ.டி ஆக்ட் மூலமாக 21 விதமான ஊனம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த 21 பிரச்சினைக்குமான மறுவாழ்வு கட்டமைப்பை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள். குறைபாடு உள்ளவர்களுக்காக பணியாற்றவும் அவர்களுக்கான கல்வி, தேவைப்படுகிற வொக்கேஷனல் பயிற்சி, அவர்களுக்கான மறுவாழ்வு தருவதற்குமான அனைத்து விஷயங்களையும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களாக வழங்கப்படுகின்றன.
இதில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளும் உண்டு. இவை தவிர்த்து பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பும் உண்டு.
புதுடெல்லியில் இயங்கும் ரிகாபிளிடேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தோடு, ஆர்.சி.அய் அங்கீகாரமும் பெற்றது இப்பாடத் திட்டம்.
இக்கல்லூரியில் படித்த பி.ஆர்.எஸ்.சி. (BRSc) மற்றும் எம்.ஆர்.எஸ்.சி.(MRSc) மாணவர்கள் இந்தியா முழுவதும் பணியாற்றுகிறார்கள். அரசு வேலை வாய்ப்பும் இந்த படிப்பிற்கு உண்டு வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது.