ஏந்தல் பெரியார்! – முனைவர் கடவூர் மணிமாறன்

என்றும் இவரே பெரியாராம்; இனமா னத்தை இயம்பியவர் குன்றென நிமிர்ந்தே எழுந்திட்டார் குவலயம் மதிக்க உயர்ந்திட்டார்! சாதி மதங்களைச் சாடியவர்! சமத்துவ உணர்வை ஊட்டியவர்! வேதம் புராணம் பொய்புரட்டை வெகுண்டே நாளும் விளக்கியவர் இல்லா ஒன்றை இல்லையென்றார்! ஏய்ப்போர் முகத்திரை கிழித்திட்டார்; பொல்லா இழிவைப் பகுத்தறிவால் போக்கிடக் கருத்து விருந்தளித்தார்! வரலா றிவரை வாழ்த்திடுமே! வைக்கம் மறவரைப் புகழ்ந்திடுமே! அரசியல் விழிப்பை அளித்திட்டார் ஆரியச் சூழ்ச்சியைத் தடுத்திட்டார்! சுயமரி யாதையை எடுத்துரைத்தார் சூத்திரப் பட்டம் துடைத்தெறிந்தார்! பயமோ […]

மேலும்....

தென்னாட்டின் தியாகத் தீ  சிதம்பரனார்!

…  முனைவர் கடவூர் மணிமாறன் …  விடுதலைப்போ ராட்டத்தில் நாட்டம் கொண்டே வெகுண்டெழுந்த சிதம்பரனார் வாழ்நாள் எல்லாம் நடுங்காத மறவன்போல் களத்தில் நின்றார்! நாட்டாண்மை செய்திட்ட ஆங்கி லேயர் ஒடுங்கிடவும் ஓடிடவும் துணிந்து, கப்பல் ஓரிரண்டை அந்நாளில் வாங்கிக் கொண்டார்! மிடுக்குறவே சொற்பொழிவால் மக்கள் நெஞ்சில் மேன்மைமிகு நாட்டுணர்வை விதைக்க லானார்! வந்தேறிக் கூட்டத்தார் சிறையில் தள்ளி வன்மமுடன் செக்கிழுக்கச் செய்தார்! உள்ளம் நொந்திடவே கல்லுடைக்கச் செய்த போதும் நுவலரிய விடுதலையை மூச்சாய்க் கொண்டே வெந்தணலை நெஞ்சுள்ளே […]

மேலும்....

காசைக் கரியாக்கும் தீபாவளி !

முனைவர் கடவூர் மணிமாறன் ஆரியக் குறும்பர் ஆணவப் போக்கால் நேரிய வாழ்வில் நெருப்பை மூட்டினர். புராண, வேத, மனுதர் மத்தால் திராவிட இனத்தவர் தேய்ந்திடச் செய்தனர். மூடச் சேற்றினுள் மூழ்கிட வைத்தே கேடுகள் விளைத்தனர்; கீழ்மை விதைத்தனர். தமிழினச் சிறப்பைத் தகர்க்கும் விழாவால் நிமிர்ந்தோர் குனிந்திடும் நிலையைத் தந்தனர். மெச்சும் திருநாள் “தீபா வளியென நச்சுக் கருத்தை நம்முள் பாய்ச்சினர். ”’தமிழர் திருநாள் பொங்கல்” என்பதே தமிழினத் தார்க்குத் தக்கதாம்: சிறப்பாம்! வன்மம் மிக்கோர் வாயுரம் தன்னால் […]

மேலும்....

புலவர் குழந்தை!

முனைவர் கடவூர் மணிமாறன் எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! நம்கா லத்தில் இணையற்ற பாவியத்தைப் படைத்த நல்லார்; பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்; குழந்தையிவர் பெயரில்தான்; சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் தமிழின் ஆழி; முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக ஏற்றமுடன் விளக்குகிற பாவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை கொள்ள ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் […]

மேலும்....

வரலாறு படைத்தவர் காமராசர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

படிக்காத மேதையெனக் காம ராசர் பாராட்டப் படுகின்றார்! என்றும் வாழ்வில் நடிக்காமல் எளிமைக்கோர் எடுத்துக் காட்டாய் நலத்திட்டம் பற்பலவும் நாளும் சேர்த்தார்! துடிப்புடனே விடுதலைப்போ ராட்டம் தன்னில் துணிவாக ஈடுபட்டார்! பள்ளி தன்னில் படிக்கின்ற பிள்ளைகட்குப் பகல்நே ரத்தில் பாங்குறவே சத்துணவு வழங்கச் செய்தார்! சட்டமன்றம் நாடாளு மன்றம் தன்னில் சால்புறவே உறுப்பினராய்ப் பெருமை சேர்த்தார்! ஒட்பமுறப் பொதுத்தொண்டில் அறுப தாண்டாய் உழைப்பாலே வரலாறு படைத்தார்; அந்நாள் பெட்புறவே தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்! பேராயக் கட்சிக்குத் தலைமை […]

மேலும்....