வீரமணி பத்து- செல்வ. மீனாட்சி சுந்தரம்

அய்யாவின் அம்மாவின் தொண்டறத்தின் நீட்சி! ஆசிரியர் வீரமணி அருந்திறத்தின் மாட்சி! கொய்யாத மலர்தாங்கும் சோலைவனக் காட்சி குளிர்பொங்கும் அருள்முகத்தின் புன்னகைப்பூ சாட்சி! பொய்க்காத கார்ப்பொழிவாய்க் கடனாற்றும் நேர்த்தி! புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் வளையாத சீர்த்தி! உய்வித்த பெரியாரே உருமாற்றம் கொண்டே உலவுகிறார் நம்மிடையே வீரமணி என்று! ஒருபத்து வயதினிலே உயர்மேடை ஏறி உலகத்தின் செவிப்பறையுள் விதைத்தாரே நீதி! பருவத்தின் முன்பழுத்த மலைத்தோட்ட வாழை! பகுத்தறிவு மணம்வீச மடல்விரித்த தாழை! உருவத்திற் கொவ்வாத உரங்கொண்ட காளை! உருக்கிட்டுச் செய்தாரோ உள்ளத்தை […]

மேலும்....

மூத்திரப்பை கைசுமந்து மூடத்தைக் களைந்தாய் வாழி !தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து!

– பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் காப்பில்லாக் கனிமரமாய்க் காய்த்த தெல்லாம் கயவர்கை பறித்தெடுத்தும் மகிழ்ந்தி ருந்தோம்! தோப்பென்று கூடாமல் தனித்தி ருந்து துயர்ச்சாதி மயக்கத்தில் அமிழ்ந்தி ருந்தோம்! கூப்புதற்கே கைகளுற்றோம்! பணிந்து நிற்கக் கூன்முதுகில் குலப்பெருமை ஏற்றி வைத்தோம்! பூப்பறியா மலர்ச்செடியாய்க் கல்வி யற்றும் புத்தனெங்கள் பாட்டனென்று பெருமை கொண்டோம்! இருள்செரிக்கும் கதிரொளியாய் நின்கண் பட்டே இழிவிருளை ஓட்டியெம்மின் விடியல் கண்டோம்! மருளூட்டும் மதஞ்சாதி சாத்தி ரங்கள் மறுதலித்து மனிதந்தான் முதன்மை யென்னும் தெருளூட்டத் தெருவெல்லாம் வடம்பி […]

மேலும்....